India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசுகையில், உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முதல் முகவரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ₹515 கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலை மூலம் சுமார் 1,010 பேர் வேலை பெறுவார்கள் என்று பெருமிதம் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருளின் தேவை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் திரைப்படம் சிக்கந்தர். இப்படம் விஜய்யின் சர்க்கார் ரீமேக் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முருகதாஸ், சிக்கந்தர் படம் முழுக்க முழுக்க புதுமையான கதைக் களத்தை கொண்டது. ஒரு முக்கிய சமூக பிரச்னையை பேசும் இப்படம், இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு பக்கா கமர்ஷியலாக இருக்கும் என தெரிவித்தார்.
பாமக வெளியிட்டுள்ள பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் 158 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, *அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் *8வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்கப்படும் *அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு முழு அகவிலைப்படி உயர்வு * தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என CM ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். NEP, மும்மொழிக் கொள்கை தொடர்பாக பிரதான் எழுதிய கடிதம் ஒன்றையும் தனது X தளத்தில் CM பதிவிட்டுள்ளார். மேலும், நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுவதாகவும், நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ₹90 ஆகக் குறைந்துள்ளது. 2ஆம் ரக பூண்டு ₹80க்கும், 3ஆம் ரக பூண்டு ₹70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கிலோ பூண்டு ₹400 முதல் ₹500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த இருவருக்கும், நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், இன்னும் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கேரள திரைத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் புகார்தாரர்கள் வாக்குமூலம் அளிக்கவில்லை. விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பினாலும், அதற்கு பதில் அளிக்கவும் இல்லை. பெண்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராத காரணங்களால், பல வழக்குகள் தள்ளுபடியாக வாய்ப்புள்ளது.
மும்மொழிக் கொள்கையை TN நிச்சயம் ஏற்காது என திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார். பிரதானின் பேச்சுக்கு பதிலளித்த அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக MPகள் ஒருபோதும் கூறியதில்லை என்றார். TN MPகள் நாகரீகமற்றவர்கள் என பேசியது வருத்தம் அளிப்பதாகவும் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, மனதை புண்படுத்தியிருந்தால் அந்தக் கருத்தை வாபஸ் பெறுவதாக பிரதான் கூறினார்.
தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2023ல் அவரது நிறுவனத்திற்கு கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் 12 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நடிகைக்கு எதிராக விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.
நிதி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற IPL முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய,
அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, எந்த குற்றப்பின்னணியும் தெரியவில்லை. ஒரு வேளை இன்டர்போல் அலர்ட் விடுத்திருந்தால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.