News March 10, 2025

நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா?

image

பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காக நேட்டோ உருவாக்கப்பட்டது. இதிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்பின் ஆலோசகரான எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்காக அமெரிக்கா ஏன் நிதியை அதிகம் செலவிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி அமெரிக்கா வெளியேறினால், நேட்டோவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

News March 10, 2025

REWIND: கோவிட் பெருந்தொற்று அறிவிக்கப்பட்ட நாள்

image

2020ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

News March 10, 2025

ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்

image

ஹாலிவுட்டில் வசூலை குவித்த படங்களில் ஹாரிபாட்டர் படங்களும் ஆகும். அதில் 2001இல் வெளியான ‘ஹாரிபாட்டர் அன்ட் தி பிளாசபர் ஸ்டோன்’ படத்தில் Ghost The Fat Friar கதாபாத்திரத்தில் நடித்தவர் சைமன் பிசர் (63) ஆவார். அவர் நேற்று மதியம் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. சைமன் பிசர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 10, 2025

ஜெயலலிதா இன்று இருந்திருந்தால்?

image

ஜெயலலிதா உயிரோடு இருக்கையில், அதிமுகவினர் தங்களுக்குள் ஒருவரையொருவர் விமர்சித்தது இல்லை. கூட்டணி குறித்து பேட்டி அளித்தது இல்லை. ஆனால், அண்மையில் ராஜேந்திர பாலாஜி, மா.பா. பாண்டியராஜன் மோதல் விவகாரம், கூட்டணி குறித்த மூத்த தலைவர்கள் பேட்டி உள்ளிட்டவை தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மட்டும் இன்று இருந்திருந்தால், இதுபோல நடக்குமா? என அவர்கள் பேசி வருகின்றனர்.

News March 10, 2025

CT2025 சிறந்த அணி இதுதான்

image

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியோரைக் கொண்டு புதிய அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சத்ரான், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (WK), க்ளென் பிலிப்ஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மிட்ச்செல் சாண்ட்னர் (C), முகமது ஷமி, மேட் ஹென்ரி, வருண் சக்ரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். உங்கள் பேவரைட் யார்?

News March 10, 2025

UPIஇல் இனி பழைய நம்பர்கள் கிடையாது

image

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI விதிகளில் பெரிய மாற்றங்களை செய்ய NPCI முடிவு செய்துள்ளது. அதன்படி, செயல்படாத செல்ஃபோன் எண்கள் உடனுக்குடன் தகுதி நீக்கம் செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பழைய எண்களை பலர் UPIயில் பயன்படுத்தி வருவதால் மோசடிகள் அதிகரித்துள்ளது. அதனை தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை செயல்படாத எண்களை நீக்குமாறு UPI நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 10, 2025

படத்தையே கொன்றுவிட்டனர்: இயக்குநர் வேதனை

image

‘சப்தம்’ படத்திற்கு போதிய புரமோஷன் செய்யாமல் கொன்றுவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பட ரீலீஸ் தாமதம் என பல குளறுபடிகளை செய்தாலும், ஹவுஸ்ஃபுல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் அன்பையும், ஆதரவையும் பெற்றதாக அவர் கூறியுள்ளார். பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாரையும் அவர் நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. கடந்த பிப்.28ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

News March 10, 2025

தனுஷ் – நயன்தாரா வழக்கில் அடுத்தது என்ன?

image

நெட்பிளிக்ஸ்-ல் வெளியான நயன்தாராவின் ஆவணப் படத்தில், நானும் ரவுடி தான் பட காட்சி இடம்பெற்றிருந்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நெட்பிளிக்ஸ்-ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தீர்ப்பு யார் பக்கம் வருமோ?

News March 10, 2025

ஆணவக் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

image

தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

News March 10, 2025

தர்மேந்திர பிரதானுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

image

நாடாளுமன்றத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் எனக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்தை அவர் வாபஸ் பெற்ற போதிலும், அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

error: Content is protected !!