News August 11, 2025

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

image

திருவனந்தபுரத்திலிருந்து 5 MP-க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், உடனே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

News August 11, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்.. வெல்லப்போவது யார்?

image

லோக்சபா, ராஜ்யசபா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து தற்போது 781 MP-க்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 MP-க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணியின் வேட்பாளரே வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், வரும் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

News August 11, 2025

முதுகு வலியை விரட்டும் சரபங்கா புஜங்காசனம்!

image

✦இது முதுகு வலியை விரட்ட உதவும்.
✦தரையில் குப்புறப்படுத்து, கைகளை தோள்பட்டைக்குக் கீழே வைக்கவும்.
➥இடுப்பு தரையில் இருக்க தலை, மார்பை மேலே உயர்த்தவும்.
➥10- 15 வினாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு மெதுவாக பழைய நிலைக்கு திரும்பவும்.
✦ரத்த ஓட்டத்தை சீராகி, செரிமானத்தை மேம்படுகிறது. கை தசைகளை வலுவாகிறது.

News August 11, 2025

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் பரத் வெற்றி

image

சினிமா நடிகர்களை போலவே, சீரியல் நடிகர்களுக்கும் மக்களிடம் ஆதரவு இருகின்றன. இந்நிலையில், சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பரத் 491 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதன்பின் அவர் கூறுகையில், இவ்ளோ Support நான் எதிர்பாக்கல; உறுப்பினர்கள் என் மேல வைத்த நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். எந்த நேரத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் நிச்சயம் தீர்வு கொடுப்பேன் என்றார்.

News August 11, 2025

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா

image

சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள தெற்கு ரயில்வே மண்டலத்தில், 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் 74,000 ரயில் பெட்டிகளிலும், 15,000 ரயில் எஞ்சின்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

News August 11, 2025

பொது வேட்பாளரை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். இதற்கான வேட்பாளர் தேர்வில் கருத்தொற்றுமையை உருவாக்க காங்., தலைவர் கார்கே கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்றாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, அரசு மீதான எதிர்ப்பை வெளிக்காட்ட பொது வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார்.

News August 11, 2025

‘பாபநாசம்’ பட குழந்தை நட்சத்திரமா இது!

image

நடிகை எஸ்தர் அனில் நீச்சல் உடையில் கிளாமராக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். குரோஷியாவில் உள்ள பீச்சில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் 2-வது மகளாக எஸ்தர் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவருக்கு தற்போது 21 வயதாகிறது. லண்டனில் உயர்கல்வி படித்து வருகிறார்.

News August 11, 2025

50 லட்சம் பயணிகளுக்கு கட்டண தள்ளுபடி

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், 50 லட்சம் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். உள்நாட்டு பயண கட்டணம் ₹1,279, சர்வதேச பயண கட்டணம் ₹4,279-லும் துவங்குகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி 2026 மார்ச் 31 வரை டிக்கெட் புக் செய்யலாம்.

News August 11, 2025

மாணவர்கள் தேர்ச்சி பெறும் வரை ப்ளஸ் 1 தேர்வு

image

கடந்த கல்வியாண்டுகளில் ப்ளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலக் கல்வி கொள்கையின் படி, நடப்பாண்டு முதல் ப்ளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆனால், முந்தைய கல்வி ஆண்டுகளில் ப்ளஸ் 1 தேர்வு எழுதி ஏராளமானவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளதால், அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

News August 11, 2025

உங்க குழந்தைகள் மொபைலில் கேம் விளையாடுகிறார்களா?

image

குழந்தைகள் தொடர்ந்து மொபைல் போனில் விளையாடினால்: *பெருவிரல் வீங்கும் `video gamers thumb’ பாதிப்பு வரும் *போனுக்கு அடிமையாவர்; படிப்பு & அன்றாட செயல்கள் பாதிக்கும் *ஆன்லைன் விளையாடினால் தேவையின்றி முன்பின் தெரியாத நபர்களுடன் தொடர்பு ஏற்படும் *தூக்கமின்மை, சோர்வு, பலவீனம், கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல் ஏற்படும் *பொய் சொல்லுதல், ஒழுக்கக்கேடு அதிகரிக்கும்.

error: Content is protected !!