News March 10, 2025

ஏழைகள் கந்துவட்டிக்கு பலிகடா ஆவதா? சீமான் ஆவேசம்

image

வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற சீமான் வலியுறுத்தியுள்ளார். நகைகளை அசல், வட்டி செலுத்தி திருப்பிய பின்னர் மறுநாள் தான், அதே நகைகளை வைத்து பணம் பெற முடியும் என்பது, ஏழைகளை கந்துவட்டி வாங்க வைக்கும் கொடும் அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வட்டியை மட்டும் செலுத்தி, நகையை மறு அடகு வைக்க இயலும் பழைய நடைமுறையே தொடரப்பட கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 10, 2025

டாக்டர் வேல்முருகேந்திரன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

image

வயது மூப்பின் காரணமாக இந்தியாவின் முன்னணி நரம்பியல் நிபுணரான டாக்டர் சி.யு. வேல்முருகேந்திரன் காலமானார். அவரது உடல், சென்னையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, சி.யு.வேல்முருகேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

News March 10, 2025

150 கோடியாம்… வசூலில் ஃபயர் விடும் ‘டிராகன்’…!

image

தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியடைந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. அவரது நடிப்பில் 2வது படமாக ரிலீசான ‘டிராகன்’, அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தி இருக்கிறது. ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சில நாட்களுக்கு முன் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வசூல் ரூ.150 கோடியை நெருங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News March 10, 2025

மூடநம்பிக்கையின் உச்சம்… பூனையை எரித்த கொடூரம்!

image

உ.பி. மாநிலம் மொரதாபாத்தில் பெண் ஒருவர் வெளியே புறப்பட்டபோது காட்டுப் பூனை குறுக்கே சென்றதாம். இதனை அபசகுணமாக எண்ணிய அவர், நண்பர்கள் உதவியுடன் அந்த பூனையை பிடித்து உயிரோடு எரித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூனையை கொன்றதாக பெண், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News March 10, 2025

நாடாளுமன்றத்தில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?

image

நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு மாநில எம்பிக்கள், அவரவர் தாய் மொழிகளை பேசுபவர்கள் ஆவர். இதனால் அவர்கள், நாடாளுமன்றத்தில் தங்களது தாய்மொழியில் கேள்வி எழுப்பி, பதிலை பெற மொழி பெயர்ப்பு வசதி உள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, அசாமி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, உருது, சமஸ்கிருதம் ஆகியவை அந்த மொழிகள் ஆகும்.

News March 10, 2025

ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைக் கண்டதால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று, ₹86.95க்கு வர்த்தகமான டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று 38 காசுகள் சரிந்து ₹87.33க்கு வர்த்தகம் ஆகிறது. கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News March 10, 2025

ரஷ்மிகா உயிருக்கு ஆபத்து?

image

ரஷ்மிகா மந்தனா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடகாவின் கொடவா சமூகத்தினர், மத்திய, மாநில உள்துறை அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொடவா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ரஷ்மிகா குறிவைக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கன்னட திரைத்துறையை புறக்கணித்த ரஷ்மிகாவிற்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என அம்மாநில எம்எல்ஏ கனிகா முன்பு கூறியிருந்தார்.

News March 10, 2025

மண் இல்லாமல் கஞ்சா வளர்ப்பு… சிக்கிய பலே ஆசாமி!

image

Hydroponic எனப்படும் முறையில் மண் இல்லாமல் கஞ்சா செடிகள் பயிரிட்டு கடத்தலில் ஈடுபட்டவரை கோவா போலீஸ் கைது செய்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.11.67 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவா வரலாற்றில் இவ்வளவு மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என போலீஸ் கூறியுள்ளது. கஞ்சா பயிரிட்டவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 10, 2025

வதந்தியால் பாழாய் போன கெரியர்: கஸ்தூரி

image

தனக்கு 20 வயதாக இருந்த போது, 60 வயது நடிகருடன் உறவில் இருந்ததாக கிசுகிசு வந்ததால், தனது சினிமா கெரியரே பாழாய் போனதாக கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்த நடிகர் தனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்து, துபாயில் செட்டில் செய்ததாக வெளியான வதந்தியால், தனது வீட்டில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே, வெறும் 8 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

News March 10, 2025

CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணியா?

image

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற IND வீரர்கள் மும்பையில் கோப்பையுடன் பஸ் பேரணி சென்றனர். அவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல், CT கோப்பையுடன் இந்திய வீரர்கள் பேரணி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், துபாயில் இருந்து வீரர்கள் தனித்தனியாக அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதாக கூறப்படுகிறது. அதனால், பஸ் பேரணிக்கு வாய்ப்பில்லையாம்.

error: Content is protected !!