News March 11, 2025

டெல்லி மக்களை மோடி ஏமாற்றி விட்டார்.. ஆம் ஆத்மி தாக்கு

image

டெல்லி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி மூத்தத் தலைவருமான அதிஷி, தேர்தலின்போது பாஜக வென்றால் பெண்களின் வங்கிக் கணக்கில் மார்ச் 8ஆம் தேதி ரூ.2,500 உதவித் தொகை வரவு வைக்கப்படுமென மோடி கூறினார். ஆனால் அதற்கு மாறாக இன்று வரை பதிவு கூட தொடங்கப்படவில்லை என்றும் சாடினார்.

News March 11, 2025

எவ்வளவு கோடி செலவானாலும் பரவாயில்லை: பெசோஸ்

image

எவ்வளவு செலவானாலும் கவலையில்லை எனக் கூறி, ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உரிமைகளை வாங்க அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் MGMஐ 2022ல் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜேம்ஸ் பாண்ட் கதையை டிவி தொடர்களாகத் தயாரிக்க திட்டமிட்டது. அதற்கு பாண்ட் படங்களை 30 ஆண்டுகளாக தயாரித்த பார்பரா, அமேசான் நிர்வாக அதிகாரிகளை முட்டாள் என விமர்சித்து இருந்தார்.

News March 11, 2025

புதிய பிரதமர்.. கனடா- இந்தியா உறவு எப்படி இருக்கும்?

image

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வாக உள்ள நிலையில், தான் பிரதமரானால், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பேன் என அவர் கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டது முதல் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கொலைக்கு இந்திய உளவுத்துறைதான் காரணம் என அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.

News March 11, 2025

ஆங்கிலத்தில் கடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

image

ஆங்கிலத்தில் கடல் OCEAN, SEA என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் OCEAN என்பது பெருங்கடலை அழைக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அட்லாண்டிங் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் ஆகியவை OCEAN என அழைக்கப்படுகிறது. இதுதவிர்த்து, SEA என்ற வார்த்தை சிறிய கடலை அழைக்க பயன்படுகிறது. வங்கக் கடல், அரபிக்கடல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

News March 11, 2025

ரகளையான ‘ரெட்ரோ’ காமிக்ஸ் உங்களுக்காக..

image

‘ரெட்ரோ’ திரைப்படத்தின் காமிக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்காக முதன்முதலாக தனது சொந்த குரலில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் டப்பிங் பேசியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரகளையான விஷயங்களையும், பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த சிரமங்களையும் கலாய்த்து காமிக்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம், வரும் மே 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

News March 11, 2025

இலவச பஸ் பயணம்.. தெலுங்கானா வேற லெவல்

image

தமிழகத்தைப் போல், தெலுங்கானாவிலும் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் எந்த மாநில பெண் என்றாலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் தெலுங்கானாவில் அந்த மாநில பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும். ஆதாரை நடத்துநர் பார்த்து உறுதிசெய்த பிறகே பஸ்சில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

News March 11, 2025

ஒடிசா: 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர்

image

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் 118 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு இருப்பதாக CM மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து 315 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 238 பேர் சரண் அடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 11, 2025

கே.எல்.ராகுல் vs அக்சர்: DC கேப்டன் யார்?

image

IPL விரைவில் துவங்க உள்ள நிலையில், DC கேப்டனை வரும் நாள்களில் அந்த அணி அறிவிக்க உள்ளது. இந்த ரேஸில் அக்சர் படேலும், கே.எல்.ராகுலும் உள்ளனர். இதில், DCக்காக 7 சீசன்கள் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் அக்சரின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன்சியில் அனுபவம் இல்லாத காரணத்தால் LSG, பஞ்சாப் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட, முதல்முறையாக DCக்காக விளையாட உள்ள ராகுலின் பெயரும் அடிபடுகிறது.

News March 11, 2025

நாக்பூரில் இருந்து வரலாறு எழுதப்படாது: கனிமொழி

image

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என பாஜக MP நிஷிகாந்த் துபே கூறியதை சுட்டிக்காட்டி, வரலாறு நாக்பூரில் எழுதப்படவில்லை என கனிமொழி சாடியுள்ளார். தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் செழித்து வளரும் மொழி எனவும், சமஸ்கிருதம் போல் பாஜகவின் பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும் மொழி அல்ல எனவும் அவர் விமர்சித்துள்ளார். பாஜகவின் பொய்களை விடவும் தமிழ் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

ராசி பலன்கள் (11.03.2025)

image

➤மேஷம் – பரிசு ➤ரிஷபம் – தனம் ➤மிதுனம் – தேர்ச்சி ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – ஓய்வு ➤கன்னி – சினம் ➤துலாம் – நஷ்டம் ➤விருச்சிகம் – மறதி ➤தனுசு – ஆதரவு ➤மகரம் – பக்தி ➤கும்பம் – சலனம் ➤மீனம் – ஓய்வு.

error: Content is protected !!