News March 10, 2025

இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவு

image

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2025

KV பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

image

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள 45 KV பள்ளிகளில், சில பள்ளிகளில் மட்டுமே 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பால்வாடிகா என்ற KG முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது. அதன்படி, <>https://balvatika.kvs.gov.in/<<>> என்ற தளத்தில் வரும் 21ம் தேதிக்குள் குழந்தைகளின் விபரங்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

போராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு

image

உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக TN அரசால் நடத்தப்படும் ‘செட்’ தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள், விரைவில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 4,000 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 2 முறை, செட் தேர்வு நடத்தி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.

News March 10, 2025

PHOTOS: கோப்பையுடன் கிரிக்கெட் வீரர்கள்

image

ICC சாம்பியன்ஸ் டிராபியை வென்றதன் மூலம் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா. தோனியின் தலைமையில் 2013ல் வெற்றி பெற்ற பிறகு, 2017ல் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இறுதிப் போட்டியில் PAKயிடம் தோல்வி பெற்றது. இம்முறை ரோஹித் அணி வாய்ப்பை கைப்பற்றியது. தொடரில் ஒரு தோல்வி கூட இல்லாமல் கோப்பையை IND வென்றுள்ளது. அந்த வகையில், வீரர்கள் CT கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News March 10, 2025

வரிப் பகிர்வு குறித்து விவாதிக்க விசிக ஒத்திவைப்பு நோட்டீஸ்

image

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், மாநிலங்களுக்கான வரி பகிர்வை 40% ஆக குறைக்க 16வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GST, செஸ் போன்றவற்றால் மாநிலங்களின் வருவாய் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டி, வரி பகிர்வை குறைக்க நினைப்பது நியாயம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

News March 10, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

*சரியான ஒன்றுக்காக துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *நீதிக்கு துணைநிற்க மறுக்கும்போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *உண்மைக்கு துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட உலகிலேயே தவறான செயல் வேறெதுவும் இல்லை
– மார்ட்டின் லூதர் கிங்.

News March 10, 2025

விமர்சனங்களுக்கு வெற்றியால் பதிலடி கொடுத்த ரோஹித்

image

டெஸ்டில் நியூசி., அணியிடம் தோல்வி.. ஆசி.,யிடமும் இதே நிலை.. இதுதவிர ஃபார்ம் இல்லாததால் பிரச்சனை.. ரோஹித்துக்கு CT தான் முடிவு என பலரும் விமர்சிக்க.. இதற்கெல்லாம் தனது கேப்டன்சியுடன் பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித். முன்னாள் வீரர்களின் பேச்சைக் கேட்காமல் 4 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்து முடிவு சரியானது என்பதை நிரூபித்தார். கோப்பையை வென்று அவரை விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் நீட்ட வைத்தார்.

News March 10, 2025

ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

image

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.

News March 10, 2025

CUET PG நுழைவு சீட்டு வெளியீடு

image

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வுக்கு 4,12,024 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்.1ஆம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை <>https://exams.nta.ac.in/CUET-PG<<>> என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News March 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 202 ▶குறள்: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். ▶பொருள்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்..

error: Content is protected !!