India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாண்டினீக்ரோவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ப்ரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்லோவேனியாவைச் சேர்ந்த மேடிக் லெவ்ரெனிக் உடனான இறுதிப்போட்டியை டிரா செய்ததன் மூலம், அவர் இப்பட்டத்தை தக்க வைத்துள்ளார். உலகின் பெருமைமிகு சாம்பியன்ஷிப் பட்டியலில் இடம்பிடித்ததாக விஸ்வநாதன் ஆனந்த் அவரை வாழ்த்தியுள்ளார்.
சண்டை பயிற்சியாளரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனங்களை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்டதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, ”கனல் கண்ணன் இதையே வாடிக்கையாக வைத்துள்ளார். அவருக்கு இதன்மூலம் தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது” என்று கண்டித்து முன் ஜாமின் வழங்கினார்.
▶மார்ச்- 08 ▶மாசி – 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM- 07:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம் ▶நட்சத்திரம் : மிருகசீரிடம்.
துபாய் போன்ற வெப்ப மண்டலத்தில் நீர் கூட அருந்தாமல் எப்படி விளையாட முடியும் என ஹர்பஜன் சிங் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மதத்தில் கூறப்பட்டிருப்பதை வீட்டில் இருக்கும் நீங்கள் செய்யலாம், ஆனால் நாட்டிற்காக விளையாடும் ஷமி அப்படி செய்தால், அவரது உடல்நிலை என்ன ஆவது எனவும் ஹர்பஜன் வினவியுள்ளார். ரமலான் மாதத்தில் கூல்ட்ரிங் குடித்து ஷமி நோன்பை தவிர்த்ததாக முஸ்லிம் மதகுரு விமர்சித்திருந்தார்.
அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை 6.12 மணியளவில் 5.1 என்ற ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் கடலில் 70 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம், 5.75 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.92 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இன்று (மார்ச் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (மார்ச் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கணவர் ஜோனஸுடன் அமெரிக்காவில் குடியேறிவிட்ட பிரியங்கா சோப்ரா, மும்பையில் இருந்த தனது 4 அபார்ட்மெண்ட்களை விற்றுள்ளார். அந்தேரியில் இருந்த இந்த அபார்ட்மெண்ட்கள் மொத்தமாக ₹16.17 கோடிக்கு விலை போயிருக்கின்றன. ஏற்கெனவே அவர், இரண்டாண்டுகளுக்கு முன் மும்பையில் 2 வீடுகளை விற்றார். முன்னணி நடிகையாக பாலிவுட்டில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார்.
தியேட்டருக்கு படம் பாக்க போலாமானு கேட்டா… அடுத்த வாரம் OTT-ல பாத்துக்கலாம் என சொல்லும் காலம் வந்துவிட்டது. ஆனால் எத்தனை OTT தளத்துக்கு சப்ஸ்கிரைப் பண்றது என்ற சலிப்பு பலரிடம் உள்ளது. அதுக்கு தான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்றைய பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுவேற ஒன்னும் இல்ல, அரசே OTT தளம் ஒன்ன உருவாக்க போகுதாம். கன்னட சினிமாவுக்கு இது ஊக்கம் அளிக்குமாம்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் பைசன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அதில் 2 துருவ் விக்ரம் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. தரமான படங்கள் மூலம் மக்களை கவர்ந்த மாரி செல்வராஜின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஃபர்ஸ்ட் லுக்க decode பண்ணிட்டா சீக்கிரம் கமெண்ட் பண்ணுக….
Sorry, no posts matched your criteria.