News March 4, 2025

விஜய்யை விமர்சிக்க திமுகவில் திடீர் தடை: இதுவா காரணம்?

image

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை DMK தற்போதே தொடங்கிவிட்டது. அந்தவகையில், அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய்யைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாமென அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரித்தபோது, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து அரசியலில் முக்கியத்துவம் பெற வைத்தது போன்ற நிலையை, விஜய்க்கும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக DMK வட்டாரங்கள் கூறுகின்றன.

News March 4, 2025

CT தொடர்களில் AUS அணியிடம் கெத்துக்காட்டும் இந்தியா

image

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் இதுவரை இந்தியா 4 முறை ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய நிலையில், 2 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஆஸி., அணியும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 151 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ள நிலையில், இந்தியா 57, ஆஸ்திரேலியா 84 போட்டிகளிலும் வென்றுள்ளன. இன்றைய அரையிறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள், கமெண்ட் பண்ணுங்க…

News March 4, 2025

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்..?

image

தனுஷ் அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாபிக் இதுதான். தனுஷ் இப்போது இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கும் படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கிறார் எனவும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தனுஷ் – அஜித் காம்போ எப்படி இருக்கும்?

News March 4, 2025

காய்கறி விலை கடும் சரிவு

image

கடந்த 2 மாதங்களாக விலை உயர்வை சந்தித்து வந்த காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேட்டில் 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ₹50க்கு விற்பனையான காய்கறிகள் விலை தற்போது ₹15 – ₹20 ஆகக் குறைந்துள்ளது. இன்று (மார்ச் 4) தக்காளி – ₹10, முருங்கை ₹40, முள்ளங்கி, கோஸ் தலா ₹8, பீட்ரூட், கத்திரிக்காய், அவரைக்காய் தலா ₹10க்கும் விற்பனையாகிறது. ஏப்ரல் வரை இதே நிலை தான் நீடிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

News March 4, 2025

அதிமுக உதிரிக்கட்சி தான்: அமைச்சர் சேகர்பாபு

image

அதிமுகவை இபிஎஸ் ஏற்கெனவே அழித்துவிட்டதால், அவர்களை திமுக போட்டியாக நினைக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, தற்போது உதிரிக்கட்சியாக மாறிவிட்டதாகவும், இபிஎஸ் தலைமையில் அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். வெற்றிகளை மட்டுமே பெற்று வரும் திமுக வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்திய டிரம்ப்

image

உக்ரைனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நேற்று முதல் நிறுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான அமைதிப்பேச்சு வார்த்தைக்கு உக்ரைனை சம்மதிக்க வைக்கவும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்தவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் நீண்ட காலம் செயல்பட முடியாது எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

News March 4, 2025

காயத்தால் முக்கிய வீரர் விலகல்: தவிக்கும் ஆஸி.

image

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஸி. அணியில் ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக அணியில், கூப்பர் கோனொல்லி சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாகவே முக்கிய வீரர்கள் விலகிய போதிலும், ஆடிய 2 போட்டிகளில் ஆஸி. வெற்றி பெற்று, தனது வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அரையிறுதியில் யார் வெற்றி பெறுவார்கள்?

News March 4, 2025

செல்வத்தை அள்ளித் தரும் லக்‌ஷ்மி காயத்ரி மந்திரம்!!

image

லக்‌ஷ்மியின் அருளைப் பெற்று வாழ்வில் செல்வ செழிப்பு அடைய இந்த லக்‌ஷ்மி காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத் பொருள்: மகாலட்சுமியே, உங்கள் இருப்பை உணர்கிறேன் விஷ்ணுவின் அன்புக்குரியவரான உங்களை தியானிக்கிறேன்! என்னை செழிப்பாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

News March 4, 2025

இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி!

image

கோவையில் நேற்று நடந்த எஸ்.பி.வேலுமணியின் மகன் <<15640305>>திருமண விழாவில்<<>> இபிஎஸ் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுவதை இச்சம்பவம் உறுதி செய்வதாக பலரும் கருத்து கூறினர். இந்நிலையில், வரும் 10ஆம் தேதி கொடிசியாவில் நடைபெறவுள்ள வரவேற்பு விழாவில் இபிஎஸ், பங்கேற்க உள்ளதாகவும், தொலைபேசி வாயிலாக நேற்று வாழ்த்துக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 4, 2025

இந்தியாவில் பிகினி அணியவே மாட்டேன்: சோனாக்‌ஷி சின்ஹா

image

எந்த ஒரு சூழலிலும் இந்தியாவில் மட்டும் பிகினி அணிய மாட்டேன் என ரஜினியின் ‘லிங்கா’ பட ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்துள்ளார். யார் எங்கிருந்து, எப்போது போட்டோ எடுப்பார்கள் எனத் தெரியாததால், அதை மட்டும் செய்யவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், வெளிநாடுகளில் இது சாதாரணம் என்பதால், எந்த ஒரு அச்சமும் இல்லாமல் பிகினி அணிந்து குளிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!