India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்களுக்கு அழைப்பு இல்லாததால் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் கட்சி HC-ல் மனு தாக்கல் செய்துள்ளது. எந்த தேர்தலிலும் களம் காணாத பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கூட்டத்திற்கு தடைவிதிக்கும்படியும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மார்ச் 5இல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பத்தூரில் நிர்வாணமாக வீடியோ எடுத்து அஞ்சல் அதிகாரியை மிரட்டி பணம் பறித்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாயை பராமரிக்க வந்த பெண்ணுடன், அந்த நபர் நெருங்கிப் பழகியுள்ளார். இதனைப் பயன்படுத்தி அந்த நபரை நிர்வாணமாக வீடியோ எடுத்த பெண் அவரது தோழிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் இரு பெண்களும் சேர்ந்து ₹5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ₹2.5 லட்சத்தை கொடுத்த நபர் போலீசிலும் போட்டுக் கொடுத்துள்ளார்.
பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று, தவெக மகளிர் அணி சார்பில் இந்தக் கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன. தமிழகத்தில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தவெக இந்தக் கருத்தரங்கை நடத்தவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில், வருங்காலத்தில் துரோகம் என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கக்கூடிய பெயர் தான் இபிஎஸ் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் அவருக்கு குருட்டு அதிர்ஷ்டத்திலும், லாட்டரி சீட்டு யோகம் போலவும்தான் முதல்வர் பதவி கிடைத்தது. அதை பயன்படுத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கையில் வைத்துள்ளார் என்றும் சாடியுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யும், தனுஷின் ‘இட்லி கடை’யும் ஒரே நாளில் ஏப்.10ம் தேதி வெளியாகிறது. இதுநாள் வரை விஜய் ரசிகர்களுடன் மல்லுக்கட்டிய அஜித் ரசிகர்கள், தற்போது தனுஷ் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. ‘எங்களுக்கு போட்டி யாரும் கிடையாது; இட்லி கடை எல்லாம் பின்வாங்க வேண்டும். இல்லையென்றால் நொறுக்கப்படும்’ என்று குட் பேட் அக்லியின் மாஸ் சீன்களை மீம்ஸ் போல் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் அருகே தனியாரால் குத்தகை எடுக்கப்பட்டு பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பார்களில், விதிகளுக்கு புறம்பாக மதுவகைகள் விற்கப்பட்டு வருவதும், அடுப்பு மூலம் சமையல் நடப்பதும் ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அரசு விதி இருந்தும், அதை தனியார் மீறுவதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, 2 இடதுசாரிகள் அங்கம் வகிக்கின்றன. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே, திமுக கூட்டணியில் விசிக நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய விவகாரம், பாஜகவுடனான திமுக நெருக்கத்தால் 2 இடதுசாரி கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதனால் திமுக கூட்டணியில் இருந்து 3 கட்சிகளும் விலகக்கூடும் எனக் கூறப்படுகிறது.
நடப்பு சாம்பியன் KKR கேப்டனாக ரஹானே, துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். KKR கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால், அவருக்கு பதில் KKRஇன் புதிய கேப்டன் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இதில் 30 வயதான வெங்கடேஷ் தலைமை பொறுப்பில் இருந்தது இல்லை. இதன் காரணமாக IPLலில் நீண்ட அனுபவம் உள்ள ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜல்லி, எம் சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜல்லி வகைகளின் விலை ₹4,000லிருந்து ₹3,400ஆக குறைந்துள்ளது. அதேபோல, GSP, Wed Mix (எம் சாண்ட்) ஆகிய பொருட்களின் விலை ₹4,000லிருந்து ₹3,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் புதிதாக வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விலை குறைப்பு சற்று நிம்மதி அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.