News March 3, 2025

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இத்தனை பேர் ஆப்சென்ட்டா?

image

பிளஸ் 2 பொதுத்தேர்வின் முதல் நாளே அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு நடந்த பிளஸ் 2 தமிழ் தேர்வில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 568 மாணவர்கள் தேர்வு எழுதுவதாக இருந்தது. ஆனால், அவர்களில் 11,430 மாணவர்கள் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகினர். தாய்மொழியாம் தமிழ் மொழி தேர்விலேயே இத்தனை மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 3, 2025

அதிமுகவில் இருந்து விலகல்.. இதே தேதியில் அன்று

image

2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா. பெங்களூரூவிலிருந்து பெரும் படை சூழ ஊர்வலமாக வந்த விதம் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்பது போல சசி என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீர் திருப்பமாக அரசியலிலிருந்து விலகல் அறிவிப்பை இதே தேதியில் (2021 மார்ச் 3) வெளியிட்டார். அரசியல் விலகலை அறிவித்த பிறகும் இன்று வரை அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறி வருகிறார்.

News March 3, 2025

LAUREUS விருதுக்கு பண்ட் பெயர் பரிந்துரை

image

LAUREUS விருதின் ‘Comeback of the year’ பிரிவிற்கு பண்ட் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022ல் கார் விபத்தில் சிக்கியதால் பண்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக பேசப்பட்டது. ஆனால், தனது கடின உழைப்பு மூலம் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில், விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் LAUREUS விருதுக்கு சச்சினுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட 2வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார்.

News March 3, 2025

புதினை விட பெரிய ஆபத்து இதுதான்: டிரம்ப்

image

ரஷ்ய அதிபர் புதினை விட அமெரிக்காவுக்குள் ஊடுருவும் பலாத்கார கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தான் ஆபத்தானவர்கள் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், புதினை நினைத்து கவலைப்படுவதற்கு பதிலாக ஊடுருவல்காரர்கள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்காவும் ஐரோப்பாவை போல மாறிவிடும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

News March 3, 2025

பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ் காலமானார்

image

ஒலிம்பிக் போட்டிகளில் 3 முறை தங்கப் பதங்கங்களை வென்ற பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ் (Buvaisar Saitiev) காலமானார். அவருக்கு வயது 49. ரஷ்யாவை சேர்ந்த சைட்டீவ் 1996, 2004, 2008இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியவர். 2009 இல் ஓய்வை அறிவித்தபோது அந்நாட்டின் பார்லிமெண்ட்டில் செனட் உறுப்பினர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 3, 2025

இஃப்தார் நோன்பில் பங்கேற்கிறார் விஜய்

image

மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். கட்சித் தொடங்கிய பின், இதுபோன்ற விழாவில் விஜய் பங்கேற்பது இதுவே முதல்முறை.

News March 3, 2025

சர்தார் 2 ஷுட்டிங்கில் விபத்து: நடிகர் கார்த்தி காயம்

image

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று நடந்த சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது. ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவரை, ஒருவாரம் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

News March 3, 2025

பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு? தங்கம் தென்னரசு

image

தமிழ்நாட்டின் கடன் ₹9.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் நீங்கள் (திமுக) அடித்த கமிஷன் எவ்வளவு என்ற அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். 2014இல் ₹55.17 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன், தற்போது ₹181.74 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதில் நீங்கள் (பாஜக) அடித்த கமிஷன் எவ்வளவு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 3, 2025

சரிவைக் கண்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள்!

image

சென்செக்ஸ் 112 புள்ளிகள் சரிந்து 73,085 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேவேளையில் மும்பை பங்குச் சந்தையான நிஃப்டியில் டெக் மஹிந்திரா, L&T, டைட்டன், கோட்டக் மஹிந்திரா, எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், TCS நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. ஆனாலும், HDFC, HCL, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. இதனால், நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

News March 3, 2025

அவதூறு பரப்புவதை நிறுத்துங்க: தங்கம் தென்னரசு

image

தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால் உங்கள் கட்சியின் (பாஜக) அமைச்சர்களிடம் கேட்டு நிலுவையில் இருக்கும் கல்வி, 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியை பெற்றுத் தாருங்கள் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். மேலும், அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல என்று கடுமையாக சாட்டியுள்ளார்.

error: Content is protected !!