News March 2, 2025

நமீபியா EX அதிபர் உடல் நல்லடக்கம்

image

<<15408924>>நமீபியா <<>>EX அதிபர் சாம் நஜூமா உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தெ.ஆப்பிரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்று தந்ததால், நமீபியாவின் தந்தை என அழைக்கப்பட்டார். 1990-2005 வரை அதிபராக இருந்த அவர், பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார், கடந்த பிப்.8ஆம் தேதி காலமான அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

News March 2, 2025

NZ-க்கு தனி ஆளாக தண்ணி காட்டும் ஸ்ரேயாஸ்

image

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித், கில், கோலி என முக்கிய விக்கெட்கள் இழந்த நிலையில், ஸ்ரேயாஸ் – அக்சர் படேல் பொறுப்புடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஸ்ரேயாஸ் அரைசதத்தை கடந்த நிலையில், அக்சர் படேல் 42 ரன்களுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். தற்போது இந்தியா 34 ஓவரில் 154/4 ரன்கள் எடுத்துள்ளது.

News March 2, 2025

மாணவர்களுக்கு உதயநிதி அட்வைஸ்

image

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி, படிக்கும் ஆர்வத்துடன் உடல்நலம் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார். தேர்வு காலம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பது மிக முக்கியம். அப்போது தான் நன்றாக படித்து தேர்வு எழுத முடியும் எனவும் தெரிவித்தார். வெயில் காலம் தொடங்கியதால், அம்மை போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்பதால் இந்த அட்வைஸை அவர் வழங்கியுள்ளார்.

News March 2, 2025

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை IMD வெளியிட்டுள்ளது. அதில், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News March 2, 2025

பள்ளியிலேயே மாணவனுடன் உறவு: ஆசிரியை கைது

image

தெய்வத்தைவிட ஆசிரியருக்கே மதிப்பளிக்கிறோம். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகள் அந்த நம்பிக்கையை குலைக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 17 வயது மாணவனுடன் பள்ளியிலேயே உடலுறவு கொண்டுள்ளார் 28 வயது ஆசிரியை டல்ஸ் புளோர்ஸ். தொடந்து மாணவனுடன் பாலியல் தொடர்பில் இருந்தது தெரியவர, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலும் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. என்ன செய்வது?

News March 2, 2025

நடிகை சமந்தாவுக்கு விருது

image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, 2010ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸான ‘Ye Maaya Chesave’ படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் சினிமா துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு, ஃபிலிம் மேக்கர்ஸ் ராஜ் மற்றும் DK விருது வழங்கினர். பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம் போன்ற பல படங்களில் சமந்தா நடித்துள்ளார்.

News March 2, 2025

மத்திய அமைச்சர் மகளுக்கு மர்ம நபர்கள் டார்ச்சர்

image

மகாராஷ்டிர மாநிலம், ஜல்கோனில் மத்திய இணை அமைச்சர் ரக்சா காட்சேயின் மகளை பின்தொடர்ந்து சென்று மர்ம நபர்கள் டார்ச்சர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முக்தாய்நகர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் மற்றும் அவரின் தோழிகளுடன் வந்து காட்சே புகார் அளித்தார். சிவராத்திரியில் இச்சம்பவம் நடந்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது.

News March 2, 2025

குடும்பத்திற்கு ரூ.3000.. திமுகவின் தேர்தல் திட்டம்!

image

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1000 வழங்குகிறது. 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?

News March 2, 2025

முத்தக் காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை: உன்னி

image

முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு விருப்பமில்லை என நடிகர் உன்னி முகுந்த் தெரிவித்துள்ளார். அனைவருக்குமான நடிகராகவே இருக்க விரும்புவதாகக் கூறிய அவர், அதனால் தான் கடந்த 7 ஆண்டுகளாக நடிக்கும் படங்களில் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உன்னி, சூரி நடித்த கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

News March 2, 2025

தபால் ஆபீசில் 21,413 காலியிடங்கள்.. நாளை கடைசி

image

தபால் ஆபீஸ்களில் 21,413 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 18- 40ஆகும். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10,000- ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 3) கடைசி நாளாகும். வேலைக்கு https://indiapostgdsonline.gov.in/ விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!