News March 2, 2025

கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே

image

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநர் கச்சத்தீவை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவு பற்றி திமுக மீது அவதூறு கூறுவோருக்கு முதல்வர் பலமுறை விளக்கம் தந்துவிட்டார். எத்தனை விளக்கம் கூறினாலும் ரவிக்கு விளங்கவில்லை. வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் வரும் வதந்திகளை வரலாறாக நினைத்துப் படிக்கும் ஆளுநர், கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்த வேண்டும் என விமர்சித்தார்

News March 2, 2025

காய்கறிகள் விலை வீழ்ச்சி

image

சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி, வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூ.100க்கு 6 முதல் 7 கிலோ தக்காளி விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 4 கிலோ ரூ.100ஆக சரிந்துள்ளது. 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. உங்கள் பகுதியில் இவற்றின் விலை என்ன? கீழே பதிவிடுங்கள்.

News March 2, 2025

குழந்தைகள், முதியோர்களுக்கு எச்சரிக்கை

image

நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதிக வெப்பம் பதிவாகுவதாக IMD எச்சரித்துள்ளது. கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பிப்ரவரியில் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகாவில் இயல்பை விட 4 – 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் வெப்ப அலை ஏற்படும் என்பதால், முதியோர், குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வார்னிங் கொடுத்துள்ளது.

News March 2, 2025

பேய் இருக்க வாய்ப்புள்ளது… ஆதி பகீர் பேட்டி

image

ஆதி நடிப்பில் சப்தம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்பட சூட்டிங் குறித்து ஆதி பேட்டியளித்துள்ளார். அதில் அவர், சப்தம் படப்பிடிப்பின்போது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்ததாகக் கூறியுள்ளார். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புகையில், இதுபோல சம்பவங்கள் பேய் இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதி சொல்வது போல பேய் இருக்கிறதா? இல்லையா? கமெண்ட் பண்ணுங்க.

News March 2, 2025

நியூசி.,க்கு 250 ரன்கள் இலக்கு

image

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து IND தடுமாறிய நிலையில், ஸ்ரேயாஸ் (79), அக்சர் படேல் (42) பொறுமையாக விளையாடி ஸ்கோரை அதிகப்படுத்தினர். அதற்கு அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு 45 ரன்கள் விளாசினார். NZ அணியில் மாட் ஹென்றி 5 விக்கெட்டை வீழ்த்தினார்.

News March 2, 2025

5 மாவட்டங்களில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

image

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் மார்ச் 4ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படாது. அன்று அவற்றுக்கு விடுமுறை.

News March 2, 2025

ரூ.769.74 கோடி சம்பளம் வாங்கிய “ராக்”

image

WWE-ல் கோலோச்சியது போல ஹாலிவுட்டிலும் அசத்தி வருகிறார் ROCK எனப்படும் டுவைன் ஜான்சன். 2023ம் ஆண்டில் மட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள், ராயல்டி மூலம் அவர் ரூ.769.74 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இதன்மூலம் போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார நடிகர்கள் பட்டியலில், உலகிலேயே அவர் முதலிடம் பிடித்துள்ளார். 2019ஆம் ஆண்டிலும் இவர்தான் முதலிடத்தில் இருந்தார். அதன்பிறகு தற்போது முதலிடம் வந்துள்ளார்.

News March 2, 2025

BREAKING: 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்

image

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனக் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் 6ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி? கமெண்ட் பண்ணுங்க.

News March 2, 2025

பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் திமுக அரசு

image

வரும் 14ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை அரசு சமர்ப்பிக்கிறது. அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும் என்றும், பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

News March 2, 2025

AK அணிந்திருந்த சட்டை ₹1.80 லட்சம்

image

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், டீசரில் AK அணிந்திருந்த சட்டையின் விலை அனைவரையும் வாய் பிளக்கச் செய்துள்ளது. ஆமாம், AK அணிந்திருந்த அந்த அட்டகாசமான சட்டையின் விலை, சுமார் ₹1.80 லட்சம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக நீங்க எவ்வளவுக்கு சட்டை எடுத்துருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!