News March 2, 2025

2025 சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்

image

2025 சனிப்பெயர்ச்சியில் கீழ்காணும் 3 ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். *மீன ராசி- மிகவும் உக்கிரமான ஜென்ம சனி தொடங்க உள்ளது. அடுத்த 2.5 ஆண்டு கவனமாக இருக்க வேண்டும் *கும்ப ராசி- பாத சனி நடக்க உள்ளது. நிதானம், திட்டமிடல் அவசியம் *மேஷ ராசி- ஏழரை சனியின் முதல் பகுதி தொடக்கம். வீண் செலவு அதிகரிக்கும். வீண் பழி ஏற்பட வாய்ப்புள்ளது.

News March 2, 2025

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்

image

மக்கள்தொகை அடிப்படையில் MP தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டம் பற்றி விவாதிக்க தமிழக CM ஸ்டாலின் அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்த நிலையில், தேமுதிகவும் பங்கேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தாய்மொழியை காத்து, மற்ற மொழிகளையும் காக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

News March 2, 2025

பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணை ரேப் செய்த 4 பேர்

image

தேனி அருகே பஸ்சுக்கு நின்ற பெண்ணை பைக்கில் அழைத்து சென்று 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனிசெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் அப்பெண் நின்றபோது, பைக்கில் வந்த 2 பேர், வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றனர். மேலும் 2 பேரும் அவர்களுடன் சேர, பெண்ணை ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று ரேப் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் 4 பேரை பிடித்து போலீஸ் விசாரிக்கிறது.

News March 2, 2025

போட்டோ ஷூட் நடத்தும் ‘அப்பா ஸ்டாலின்’

image

பெரியகுளத்தில் ஜெ., 77ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்கிறார் ஸ்டாலின். ஆனால், அவர் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று விமர்சித்தார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது என சாடிய அவர், எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் நடத்தும் ‘அப்பா ஸ்டாலின்’ சிறுமிகள் அப்பா! அப்பா! என்று கதறும்போது எங்கே போனார் எனவும் கேள்வி எழுப்பினார்.

News March 2, 2025

வீட்டுக்குள் 10 நாட்களாக சடலமாக கிடந்த நடிகர்

image

ஹாலிவுட் நடிகர் <<15598992>>ஹேக்மேன்<<>>, அவரின் மனைவி பிப்.26இல் வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து அமெரிக்க போலீஸ் விசாரித்து வரும் நிலையில், புதுத் தகவல் வெளியாகியுள்ளது. 2 பேரும் பிப்.17ஆம் தேதியே இறந்து விட்டதாகவும், ஆனால் 10 நாளுக்கு பிறகு பிப்.26ஆம் தேதிதான் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2 பேரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

News March 2, 2025

ஆங்கிலம் தான் அலுவல் மொழி: டிரம்ப் உத்தரவு

image

ஆங்கிலத்தை அமெரிக்காவின் அலுவல் மொழியாக அறிவித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இனி அரசுப் பணிகளில் ஆங்கிலம் கட்டாயமாக இருக்கும், ஆனால், பிறமொழி சேவைகள் கட்டாயமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதால், அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. எனினும், இது அங்கு வசிக்கும் ஆங்கிலம் அறியாத, ஸ்பானிஷ் மொழியினரும் சீனர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

News March 2, 2025

மருமகனின் கட்சிப் பதவியைப் பறித்தார் மாயாவதி

image

தேசிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் மருமகன் ஆகாஷ் ஆனந்தை பிஎஸ்பி தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக அந்த இடத்தில் ஆகாஷின் தந்தை ஆனந்த் குமார், கட்சி மூத்தத் தலைவர் ராம்ஜி கெளதமை அவர் நியமித்துள்ளார். மாயாவதிக்கு பிறகு கட்சியின் முகமாக ஆகாஷ் பார்க்கப்பட்டார். அவரிடம் இருந்து கட்சிப் பதவியை மாயாவதி பறிப்பது இந்தாண்டில் இது 2ஆவது முறையாகும்.

News March 2, 2025

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, மாணவர்கள் கைது

image

கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு பாலியல் தொல்லை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில்
வீட்டில் தனியாக இருந்த மாணவிகளை குறிவைத்து, 5 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், 5 மாணவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News March 2, 2025

நியூசி.க்கு எதிரான போட்டி.. விராட் கோலி புதிய சாதனை

image

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இப்போட்டி கோலியின் 300ஆவது ஒருநாள் போட்டி ஆகும். இதன்மூலம் 300ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7ஆவது இந்திய வீரர் ஆவார். மேலும் சர்வதேச அளவில் 18ஆவது வீரர் ஆவார். இப்பட்டியலில் அப்ரிடி 398 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் தோனி 350 போட்டிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.

News March 2, 2025

சம்பவம் செய்ய தேதி குறிச்ச ‘கேங்கர்ஸ்’

image

சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ‘ஹிட்’ கூட்டணியில் ‘கேங்கர்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

error: Content is protected !!