News March 2, 2025

வசூல் வேட்டையாடும் ‘டிராகன்’

image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ₹100 கோடி வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், முதல் 3 நாளில் ₹50 Cr வசூல் செய்திருந்த நிலையில், அடுத்த 9 நாட்களில் ₹100 Cr கோடியை தாண்டியது. இளம் நடிகர் ஒருவர் நடித்த முதல் 2 படங்களும் ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்வது இதுவே முதல்முறை.

News March 2, 2025

5 விக்கெட்டுகளை சாய்த்த வருண் சக்கரவர்த்தி

image

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார். துவக்க ஆட்டக்காரர் வில் யங்க்கை (22) ஆரம்பத்திலேயே அவுட் ஆக்கிய வருண், பின்னர் பிலிப்ஸ் (12), பிரேஸ்வெல் (2), சான்ட்னர் (28), மேட் ஹென்ரி (2) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்து அதிர்ச்சி அளித்தார். மொத்தம் 10 ஓவர்கள் வீசி 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

News March 2, 2025

இந்தியா அபார வெற்றி

image

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசி.க்கு எதிரான போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த IND 249 ரன்கள் எடுத்தது. இந்த எளிய இலக்குடன் களமிறங்கிய NZ அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அட்டகாசமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

News March 2, 2025

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே!

image

நாளை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் இதை பின்பற்றி படித்தால் சிறப்பாக தேர்வை எழுதலாம். தேர்வுக்கு தயாராகும் முன்பு முதலில் பாடத்திட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எதைப் படிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் படிப்பது, எத்தனை மணிநேரம் படிப்பது என்று திட்டமிடுவது இன்னும் பலனளிக்கும்.

News March 2, 2025

மேட்சை மாற்றிய வருணின் மேஜிக் பந்து

image

NZக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றி, மேட்சை IND பக்கம் திருப்பியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே NZ வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், வருண் தனது மேஜிக் பந்தால் பிலிப்ஸ், மிச்சல் ஆகியோரின் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால், 39 ஓவரில் 162/6 ரன்கள் எடுத்துள்ள நியூசி., வெற்றிபெற இன்னும் 66 பந்துகளில் 88 ரன்கள் எடுக்க வேண்டும்.

News March 2, 2025

மாணவர்களே! தேர்வு பயம் தேவையில்லை

image

இருக்கும் காலகட்டத்தைப் பிரித்து அட்டவணை உருவாக்கி, அதன்படி நிதானமாக படிப்பதன் மூலம் தேர்வில் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால், மனநிலை தான். மனநிலை திடமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு முன் எதிர்மறை எண்ணங்களைத் துரத்திவிட வேண்டும். தேர்வு பயம், மனநெருக்கடி, கவனச்சிதறல்கள், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை தூக்கி எறிய வேண்டும்.

News March 2, 2025

பெண்கள் ‘BRA’வில் ஆபத்து

image

தற்காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் ஆபத்து கலந்துள்ளது. இதில் பெண்கள் அன்றாடம் அணியும் ‘பிரா’வும் விதிவிலக்கல்ல. அண்மை ஆய்வில் சுமார் 64% பிராக்களில், ஆபத்தான கெமிக்கல்கள் இருந்துள்ளன. பிரா உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி <<15631256>>பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன<<>>.

News March 2, 2025

எதிர்மறை எண்ணங்களை தடுப்பது எப்படி?

image

✦புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம். ✦இனிமையான பாடல்களை கேட்கலாம். ✦தியானத்தில் ஈடுபடலாம். ✦புன்னகை தவழும் முகத்துடன் வலம் வாருங்கள். ✦முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் இருங்கள். ✦முதியவர்கள் அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். ✦எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.

News March 2, 2025

உங்கள் ஆசையில் மண் விழும்: ஸ்டாலின்

image

எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது; உங்கள் ஆசையில் தான் மண் விழும் என்று பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நாங்கள் தமிழர்கள்; சுயமரியாதையுள்ள திராவிடர்கள் எனக் கூறிய அவர், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகவும், இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும் பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக உறுதி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

News March 2, 2025

CT போட்டி: நியூசிலாந்து நிலையான ஆட்டம்

image

இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசி., 28-வது ஓவரில் 113/3 ரன்களுடன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 249 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 250 ரன்களை இலக்காகக் கொண்டு நியூசிலாந்து விளையாடி வருகிறது. ரச்சின் ரவீந்திரா 6 ரன்னிலும், வில் யங்க் 22 ரன்னிலும் அவுட்டானார்கள். இதையடுத்து வில்லியம்சன், மிட்செல் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.

error: Content is protected !!