News March 3, 2025

அநாகரிக அரசியல் செய்யாதீங்க வன்னி அரசு

image

இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் என காரணம் காட்டி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு பேச்சுக்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. அறமற்ற பொய்யை வன்னி அரசு பேசியுள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்கும் விஜய், கட்சியின் பல முக்கிய பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அநாகரிக அரசியலை விட்டுவிட்டு, நாகரிக அரசியல் பாதையில் பயணம் செய்யுங்கள் என சாடியுள்ளது.

News March 3, 2025

நாளை முதல் +2 பொதுத்தேர்வு

image

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 03) தொடங்குகிறது. தேதியும் தேர்வுகளும்: ➤மார்ச் 03- தமிழ், மொழிப்பாடம், ➤மார்ச் 06- ஆங்கிலம் ➤மார்ச் 11- கணிதம், வணிகவியல், விலங்கியல் ➤மார்ச் 14- கணினி அறிவியல், நர்சிங், ➤மார்ச் 18- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ➤மார்ச் 21- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ➤மார்ச் 25- இயற்பியல், பொருளியல். SHARE IT.

News March 3, 2025

பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. ஆர்ஜேடி வலியுறுத்தல்

image

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்க வேண்டுமென பீகார் அரசை RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார். பீகார் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள தேஜஸ்வி யாதவ், பட்ஜெட்டில் ரூ.2,500 வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். வயதானோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.400இல் இருந்து ரூ.1,500ஆக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News March 3, 2025

ராசி பலன்கள் (3-03-2025)

image

➤மேஷம் – லாபம் ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – வெற்றி ➤கன்னி – நலம் ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – அச்சம் ➤தனுசு – மறதி ➤மகரம் – பணிவு ➤கும்பம் – அசதி ➤மீனம் – நிறைவு.

News March 3, 2025

CT போட்டி: அரையிறுதியில் ஆஸி.யுடன் இந்தியா மோதல்

image

சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, துபாயில் வருகிற 4ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. லாகூரில் 5ஆம் தேதி நடைபெறவுள்ள 2ஆவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை நியூசிலாந்து எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளில் வெற்றி பெறும் 2 அணிகள், 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.

News March 3, 2025

தம்பதியரே பேச்சை நிறுத்தாதீர்

image

தம்பதியர் தங்களுக்குள் பேச்சுவார்த்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இல்லையெனில், சிறு பிளவும் பெரிய பிரச்னைக்கு காரணமாகிவிடும். சிறிது அமைதியாக இருக்கலாம், பின் உடனே பேசிவிடுங்கள். துணைவர்மீது கோபம், அதிருப்தி மனதைப் பிசைந்து கொண்டிருந்தாலோ, அலுவலகப் பிரச்னையாக இருந்தாலோ, மனதில் இருப்பதை அவரிடம் பகிருங்கள். அவரையும் உங்கள் பிரச்னையில் உதவி செய்ய வையுங்கள்.

News March 2, 2025

3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: IMD அலர்ட்

image

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கலாம் என IMD எச்சரித்துள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்த நிலையில், நாளை முதல் 6ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி? கமெண்ட் பண்ணுங்க.

News March 2, 2025

மாணவர்களே அதிகாலையில் படியுங்க

image

24 மணி நேரமும் படிக்கிறேன் என்ற பெயரில் உடல்நலனைக் கெடுத்துக் கொள்ள கூடாது. இரவு தூக்கத்திற்குப் பின் அதிகாலை நேரத்தில், அதாவது காலை 4 மணி முதல் 8 மணி வரை படிப்பது இரட்டிப்பு பலனை அளிக்கும். ஏனென்றால் அதிகாலை நேரத்தில் மற்ற இடையூறுகள் குறைவதுடன், தூங்கி எழுந்ததும் படிப்பதால், மூளைத்திறன் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் பதட்டப்பட கூடாது.

News March 2, 2025

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த UK திட்டம்

image

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த UK, பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும், அதை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் முன்மொழிய உள்ளதாகவும் UK பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், அதன் இறையாண்மையை காப்பதாகவும் அமையும். மேலும், உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த 3.1 பில்லியன் டாலர் கடனுதவியையும் UK அறிவித்துள்ளது.

News March 2, 2025

பிரபல ஓவியர் சேகர் காலமானார்

image

பிரபல ஓவியர் சேகர் காலமானார். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (65). கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மாத இதழ்கள், நாளிதழ்கள், வார இதழ்களில் ஓவியம் வரைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!