News March 3, 2025

பயப்படுவதற்கு நாங்கள் என்ன அதிமுகவா? உதயநிதி

image

மத்திய அரசு மிரட்டினால் பயப்படுவதற்கு தாங்கள் ஒன்றும் அதிமுகவோ, இபிஎஸ்ஸோ கிடையாது என உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றால், மாநிலத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் எனவும், ஏற்கனவே ஹிந்தி திணிப்பால் பல மாநிலங்களில் தாய்மொழி அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், மத்திய அரசை கண்டித்து, இன்று முதல் தொகுதிதோறும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தபட உள்ளன.

News March 3, 2025

உங்களை தடுப்பது எது?

image

எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க தடையாக இருப்பவை இவைதான் : *உங்களுடைய அச்சங்களை மற்றவர்கள் மீது பொருத்திப் பார்த்தல் *நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை மட்டுமே பரிசீலித்தல் *கடந்த காலத்தில் வாழ்தல் *இதற்கு மேல் எதுவும் இல்லையென்று நினைப்பது *எப்போதும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என யோசிப்பது *எதிர்பாராதது நடந்துவிடுமோ என்ற அச்சம். இவற்றை விட்டு வெளியே வாருங்கள், எல்லாம் நலமே.

News March 3, 2025

2025 ஆஸ்கர் விருதுகள் விழா: எங்கு பார்க்கலாம்?

image

97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்டார் மூவிஸ், ஸ்டார் மூவிஸ் செலக்ட் சேனல்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். காலையில் பார்க்க முடியாதவர்ளுக்காக, இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பப்படும். ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நிகழ்ச்சியை பார்க்கலாம். இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள ‘அனுஜா’ குறும்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

News March 3, 2025

உக்ரைனுக்கு மேலும் $2 பில்லியன் நிதி கொடுத்த UK

image

5,000 ஏவுகணைகளை வாங்க உக்ரைனுக்கு $2.84 பில்லியன் நிதியை வழங்க உள்ளதாக UK பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு, அவர் இதை தெரிவித்துள்ளார். முடக்கி வைக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் லாபத்தில் இருந்து இந்த நிதியை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, உக்ரைனுக்கு நேற்று £2.26 பில்லியன் நிதி வழங்குவதாக UK அறிவித்தது.

News March 3, 2025

மார்ச் 3: வரலாற்றில் இன்று

image

* 1707 – முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் உயிரிழந்த நாள். *1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார். *1839- டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்தநாள். *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. *1939 – மும்பையில மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். *உலக காட்டுயிர் நாள்

News March 3, 2025

பாபருக்கு முன்னாடி கோலி ஜீரோ: பாக். முன்னாள் வீரர்

image

என்னதான் CTயில் படுதோல்வி அடைந்து அவமானப்பட்டாலும், பாக். வீரர்களின் மனநிலை இன்னும் மாறவே இல்லை. பாக். முன்னாள் வீரர் மொஷின் கான், கோலிக்கு எதிராக பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. பாபர் அசாமுக்கு முன்னாடி கோலி எல்லாம் ஒன்றுமே கிடையாது எனவும், ஜீரோ எனவும் அவர் கூறியுள்ளார். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இருவரையும் ஒப்பிட முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 3, 2025

சிம்பு படத்தில் இணைந்த சந்தானம்?

image

சிம்புவின் 49ஆவது படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோவாக நடிக்க தொடங்கியதில் இருந்து மற்ற நடிகர்கள் படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த சந்தானம் நட்பு, முக்கிய கதாபாத்திரம், ‘மதகஜராஜா’ வெற்றி ஆகிய காரணங்களால் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.

News March 3, 2025

மார்டின் லூதர் கிங் பொன்மொழிகள்

image

*வெறுப்பை அன்பால் மட்டுமே விரட்ட முடியும். *கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும். *சுதந்திரம் ஒருபோதும் ஒடுக்குவோரால் தானாக முன்வந்து கொடுக்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களால் கோரப்பட வேண்டும். *தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி. *ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.

News March 3, 2025

விழாக்கோலம் பூண்ட நகர்.. இப்போ எப்படி இருக்கு?

image

மகா கும்பமேளாவில் விழாக்கோலம் பூண்ட உ.பியின் பிரக்யாராஜ் நகர், தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. 60 கோடி மக்கள் பயணித்த அப்பகுதியில் தற்போது, தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டு, குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் வெள்ளமாக காட்சியளித்த அப்பகுதி, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

News March 3, 2025

WOW: நிலவில் டவர் அமைக்கும் நோக்கியா!

image

நாசாவுடன் இணைந்து நிலவில் செல்லுலார் டவர் அமைக்கும் பணிகளில் நோக்கியா ஈடுபட்டுள்ளது. நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் நாசாவின் Artemis திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள், ரோவர்கள் இடையே தொலைதொடர்பு வசதிக்காக டவர் அமைக்கப்பட உள்ளது. விண்வெளியின் கடுமையான சூழல்களிலும் செயல்படும் விதமாக டவர் அமையும் என நோக்கியா தெரிவித்துள்ளது.

error: Content is protected !!