News March 3, 2025

வளமான மொழிகளின் தேசம் இந்தியா: தன்கர்

image

ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்ப்பதை ஆதரிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்தியா வளமான மொழிகளின் நிலம் என்றும், நாடாளுமன்றத்தில் கூட 22 மொழிகளில் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு நடைபெறுவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், இந்திய மொழிகளை வளர்ப்பதால், எதிர்கால தலைமுறைகள் தங்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 3, 2025

IPL அணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த BCCI

image

நடப்பு IPL சீசன் தொடங்குவதற்கு முன்னர் அணிகளுக்கு BCCI புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, IPL தொடர் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு அணியும் 7 பயிற்சி அமர்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் ◆இரவு மைதான கண்டிஷனில் அதிகபட்சமாக 3.30 மணிநேரம் மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும் ◆7 பயிற்சி அமர்வுகளில் 2 மட்டுமே பயிற்சி ஆட்டமாகவோ அல்லது நெட் இல்லாமல் ஓப்பன் மைதானத்திலோ பயிற்சி செய்து கொள்ளலாம்.

News March 3, 2025

‘STR 50’ படம் டிராப்? வெளியான தகவல்

image

யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் ‘STR 50’ படம் டிராப் ஆகியிருக்கும் என அப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கைவிடப்படும் நிலைக்கு வந்தபோது, யுவன் தான் சிம்புவை நேரில் அழைத்து படத்தைத் தயாரிக்க ஊக்குவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். வரலாற்று ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில், சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

News March 3, 2025

முட்டை விலை மேலும் வீழ்ச்சி

image

முட்டை கொள்முதல் விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. நாமக்கல்லில் 1 முட்டை விலை நேற்று காலை ரூ.4.20ஆக இருந்தது. இது நேற்று மாலை 20 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.4ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 60 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் சில்லரை கடைகளில் 1 முட்டை ரூ.4.50 -ரூ.5 வரை விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கமெண்ட் பண்ணுங்கள்.

News March 3, 2025

வாழ்வில் இன்பத்தை பெருக்கும் முருகன் காயத்ரி மந்திரம்!

image

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

பொருள்:

ஓம், ஈசனின் மகனே!
என்னை அறிவொளியாக்கி, வழிநடத்துங்கள்!
முருகப்பெருமானே: இறைவனை தியானிப்போம்!

News March 3, 2025

சீமான் போன்றோர் தலைவர்களாகக் கூடாது: நடிகை

image

சீமான் போன்றவர்கள் தலைவர்களாகக் கூடாது என்பதற்காகவே போராடி வருவதாக, அவர் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த குரல் பதிவில், சீமானோடு தன்னால் சமரசமாக போய்விட முடியும், ஆனால் எதற்காக போராடுகிறேன் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் எனவும் கூறியுள்ளார். சீமான் சாமானியனாக இருந்திருந்தால், தனக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும் என்றார்.

News March 3, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 31ஆம் தேதி வரை கெடு

image

ரேஷனில் வழங்கப்படும் மலிவு விலை பொருட்கள் சரியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய eKYC செய்வது கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 31ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் eKYC செய்யவில்லையெனில், ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் eKYC செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

News March 3, 2025

5 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை

image

அய்யா வைகுண்டர் அவதார தினமான நாளை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படாது. அன்று அவற்றுக்கு விடுமுறை.

News March 3, 2025

+1 பொதுத்தேர்வு அட்டவணை

image

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது. தேதியும் தேர்வுகளும்: ➤மார்ச் 05 – தமிழ், மொழிப்பாடம், ➤மார்ச் 10 – ஆங்கிலம், ➤மார்ச் 13- கணினி அறிவியல், கணினி பயன்பாடு, ➤மார்ச் 17- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ➤மார்ச் 20- இயற்பியல், பொருளியல், ➤மார்ச் 24- கணிதம், விலங்கியல், வணிகவியல், ➤மார்ச் 27- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல். SHARE IT.

News March 3, 2025

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு: இதை தெரிஞ்சுக்கோங்க..

image

இன்று தொடங்கும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தேர்வு தொடர்பான ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 9498383075, 9498383076 ஆகிய எண்களில் முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யலாம். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

error: Content is protected !!