India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தாக்குதலால் பாக்.,- இந்தியா இடையே போர் பதற்றம் தொற்றியது. பாக்., பின்வாங்கியதால் தாக்குதல் கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக அறிவித்தது. இதனால் பதறிப்போன பாக்.,கும் இன்றே போர் ஒத்திகையில் ஈடுபடபோவதாக கூறியுள்ளது.
இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் அல்-ஷிஃபா ஹாஸ்பிடலுக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அல்ஜசிராவின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிஃப் தீவிரவாதி என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இறப்புக்கு முன்னர் ஷெரிஃப் எழுதிய உருக்கமான கடிதத்தை அவரது நண்பர் X தளத்தில் பகிர்ந்துள்ளார். 22 மாத போரில் இதுவரை 200 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
மரணமடைந்த ‘<<17365976>>யுத்த நாயகன்<<>>’ டிகே பருல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘The Great Indian Escape’ (2019) என்ற படம் வெளிவந்தது. 1971 போரின் போது, பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இவர், சிறையில் இருந்து தப்பிக்கும் போது, தன்னுடன் சேர்த்து 2 இந்திய வீரர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார். விமானப்படை வீரரான டிகே பருல்கர் தனது வீரத்திற்காக வாயு சேனா மற்றும் விஷிஷ்ட் சேனா பதக்கங்களை பெற்றுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய OPS, அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகிறார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட அவர், ஆவணி 1-ம் தேதி (ஆக.17) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, NDA கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து மக்களிடம் விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
தான் எப்போதும் அதிகார பரவலாக்கத்தின் ஆதரவாளர் என்று SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதி, மக்களின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும்; அதிகார மண்டபங்கள் இருக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பலி கொடுக்கக் கூடாது எனக் கூறிய அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சாசனமே புனித நூல், அதைத்தான் நம்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, கட்சிப் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் தேசிய பொதுச் செயலாளர் BL சந்தோஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் பாமக, தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதை பற்றியும் பேசப்பட்டுள்ளது. கடந்த கால கசப்புகளை மறந்து அதிமுக – பாஜக கூட்டணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல உழைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. OPS-ஐ சமாதானம் செய்யவும் பாஜக முயற்சிக்கிறதாம்.
ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியதால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில், அன்புமணிக்கு பதிலாக ராமதாஸ் புதிய வாரிசை அரசியலில் களமிறக்கியுள்ளார். நேற்று நடந்த பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸுடன் மகள் காந்திமதியும் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸின் மகள் வழிப்பேரன் முகுந்தனின் சகோதரர் சுகுந்தனும் பங்கேற்றது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
Sorry, no posts matched your criteria.