India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரோஹித்தின் உடல் எடை குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, விளையாட்டு வீரருக்கான தகுதியில் அதிக எடையில் ரோஹித் இருப்பதாகவும், அவர் எடை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்ப்பில்லாத கேப்டன் ரோஹித் எனவும் விமர்சித்துள்ளார். இதற்கு கலவையான பதில்கள் வருகின்றன. நீங்க என்ன சொல்றீங்க?
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சமோலியில் அண்மையில் நேரிட்ட பனிச்சரிவில் 55 எல்லைச் சாலை அமைப்பு ஊழியர்கள் சிக்கி புதையுண்டனர். அவர்களில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 47 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. பிப்.6ஆம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி சிறந்த அணி இல்லை என PAK EX வீரர் சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார். இந்தியா உண்மையில் சிறந்த அணி என்றால் 10 டெஸ்ட், 10 ஒருநாள், 10 T20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும், அப்போது யார் சிறந்த அணி என்று தெரிந்து விடும் எனவும் கூறியுள்ளார். சொந்த நாட்டில் நடக்கும் நடப்பு CT-யில் ஒரு வெற்றியைக் கூட பாகிஸ்தானால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பல்கலை.களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இத்தேர்வுக்கு மார்ச் 22ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வரும் மே 8 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை இளங்கலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழகம் போராட்டக் களம் காணாமல் இருந்ததில்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் சதியை உணர்ந்தே மொத்த தமிழகமும் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையான திறந்தவெளியில் நடைபயிற்சி செய்வது அதிக நன்மைகளைக் கொடுக்கும். புல்வெளிகள், கடற்கரைகள், மலைப்பகுதி போன்ற இயற்கை பகுதியில் நடப்பதால் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது, நரம்பு-தசை ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது, ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும் கார்டிசோலைக் குறைக்கிறது என்கிறார்கள். அதே போல, அதிகாலை 4:30 – 8:00 மணிக்குள்ளும், மாலை 4:30 – 7:00 மணிக்குள் நடப்பது நல்ல பலன்களை அளிக்கும். SHARE IT.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இதுவரை இரண்டு கட்ட லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாவது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. புள்ளிப்பட்டியலில் உ.பி அணி 3வது இடத்திலும், குஜராத் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
வாரத்தில் 7 நாள் தோசை போட்டாலும் சாப்பிடுவேன் என சொல்லும் நம்ப ஆளுங்க அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7 ஆம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை சொல்லுங்க!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல்நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத்தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்காக 3,316 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட சுமார் 8.15 லட்சம் பேர் எழுதவுள்ளனர். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் (அ) நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.