News March 3, 2025

ஒரே படத்துக்கு 4 ஆஸ்கார் வென்ற இயக்குநர்!

image

ஹாலிவுட் இயக்குநர் சீன் பேக்கர் ஆஸ்காரில் வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை என அனோரா படத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 4 கேட்டகிரியிலும் அவர் விருதை தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம், ஒரே படத்திற்காக 4 ஆஸ்கார் வென்ற ஒரே நபர் என்ற சாதனையை சீன் பேக்கர் படைத்துள்ளார்.

News March 3, 2025

தபால் ஆபீசில் 21,413 காலியிடங்கள்.. இன்றே கடைசி

image

தபால் ஆபீஸ்களில் 21,413 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18- 40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலையில் சேருவோருக்கு மாதம் ரூ.10,000- ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு <>https://indiapostgdsonline.gov.in/ <<>>விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News March 3, 2025

BREAKING: வெள்ளி விலை ரூ.1,000 உயர்வு

image

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.7,940க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.105க்கும், 1 கிலோ ரூ.1.05 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. அதேநேரத்தில் 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.106க்கும், 1 கிலோ ரூ.1,000 அதிகரித்து ரூ.1.06 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

News March 3, 2025

வருண் சக்ரவர்த்தி படைத்த புதிய சாதனை

image

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வருண் சக்ரவர்த்தி, தனது 2 போட்டியிலேயே (நியூசி., எதிராக) 5 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் விரைவாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்டூவர்ட் பின்னி, அவரது 3வது போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது.

News March 3, 2025

பார்த்து சபதம் எடுங்க அண்ணாமலை: அமைச்சர்

image

திராவிட மண்ணில் அண்ணாமலையால் வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தம்பி அண்ணாமலை நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன்பு, தன்னைத் தானே சாட்டையில் அடித்துக்கொண்டதுடன், வாழ்நாள் முழுவதும் செருப்பு போட மாட்டேன் என சபதம் எடுத்துக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், கொஞ்சம் யோசித்து சபதம் எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

News March 3, 2025

ஆப்கான் அணியை பார்த்து கத்துக்கோங்க: ரிச்சர்ட்ஸ்

image

ஆப்கான் கிரிக்கெட் அணியை பார்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி கற்றுக்கொள்ள வேண்டும் என WI முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். பெரிய பாரம்பரியத்தைக் கொண்ட WI, சாம்பியன்ஸ் டிராபியில் இல்லாதது தன்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளதாகவும், சிறிய அணியான ஆப்கான் வியக்கத்தக்க அணியாக மாறிவருவதை WI வீரர்கள் கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். நடப்பு CT தொடரில் ENG அணியை ஆப்கான் வீழ்த்தியது.

News March 3, 2025

அமைச்சர் மகளிடம் பாலியல் சீண்டல்.. போக்சோ பாய்ந்தது

image

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய இணை அமைச்சர் ரக்சா காட்சேயின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 7 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்காவ்னில் கடந்த வெள்ளி சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் காட்சேயின் சிறு வயது மகளை பின்தொடர்ந்து சிலர் தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலரை போலீஸ் தேடுகிறது.

News March 3, 2025

நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்த பங்குச்சந்தை!

image

பங்குச்சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 414 புள்ளிகள் உயர்ந்து 73,612 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து 22,234 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

News March 3, 2025

அனைத்து பஸ்களிலும் விரைவில் பயணச்சீட்டு கருவி

image

அனைத்து பஸ்களிலும் பயணச்சீட்டு கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. முதலில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் 2024இல் இக்கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களிலும் நடைமுறையில் வந்த நிலையில், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களிலும் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக கூறியுள்ளது.

News March 3, 2025

97வது ஆஸ்கார் விருது பட்டியல்

image

சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (The Brutalist)
சிறந்த நடிகை – மைக்கி மேடிசன் (Anora)
சிறந்த இயக்குநர் – சீன் பேக்கர் (Anora)
சிறந்த படம் – Anora
சிறந்த இசை – The Brutalist படம்
சிறந்த சர்வதேச திரைப்படம் – I’m Still Here
சிறந்த ஒளிப்பதிவு – The Brutalist படம்
சிறந்த துணை கீரன் கல்கின் (A Real Pain)
சிறந்த துணை நடிகை – ஸோயி சல்தானா (Emilia Perez)

error: Content is protected !!