India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய குறும்படமான ‘அனுஜா’ சிறந்த பெஸ்ட் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கரை தவறவிட்டுள்ளது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த போதும், ‘I’m not a robot’ படத்திடம் விருதை ‘அனுஜா’ பறிகொடுத்தது. டெல்லியில் வசிக்கும் 9 வயது பெண் குழந்தை தொழிலாளி, வறுமையில் இருந்து விடுபடும் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை பிரியங்கா சோப்ரா பிரமோட் செய்து பிரபலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நீட்’ ரத்து செய்யும் ரகசியத்தை #Daddy_Son சொல்ல வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். திண்டிவனத்தில் நீட் அச்சம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் நீட்டை ரத்து செய்யாதது ஏன் என வினவிய அவர், DMK பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு இனியாவது இத்தகைய மரணங்களை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் 4 சுழற்பந்து வீச்சாளர்களும் (ஜடேஜா, வருண், அக்சர், குல்தீப்) சேர்ந்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். CT தொடர் வரலாற்றில் இதற்கு முன்பு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
வெள்ளி விலை கடந்த 3 மாதங்களில் கிலோவுக்கு ரூ.8,000 அதிகரித்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்பனையானது. இது படிப்படியாக சத்தமின்றி அதிகரித்து இன்று 1 கிராம் ரூ.106ஆகவும், 1 கிலோ ரூ.1.06 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. அதாவது, சுமார் 3 மாதங்களில் 1 கிராம் வெள்ளி விலை ரூ.8ம், 1 கிலோ வெள்ளி ரூ.8,000ம் உயர்ந்துள்ளது. என்ன வெள்ளி வாங்க கிளம்பிட்டீங்களா?
சீமானுக்கு எதிரான நடிகையின் வழக்கை விசாரிக்க SC இடைக்காலத் தடை விதித்துள்ளது. சீமான் மீதான நடிகையின் பாலியல் வன்காெடுமை வழக்கு குறித்து 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி காவல்துறைக்கு சென்னை HC உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை சென்னை போலீஸ் முடுக்கிவிட்டுள்ள நிலையில், சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து SC இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரது பேரன் துஷ்யந்த் நடித்த திரைப்படத்திற்காக வாங்கிய ரூ.3.74 கோடி கடனை, ரூ.9.39 கோடி வட்டியுடன் செலுத்தத் தவறியதால் தனபாக்கியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகரான துஷ்யந்த், சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கேம் சேஞ்சர் ஹீரோயின் கியாரா அத்வானி, அண்மையில் தாம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார். இந்நிலையில், இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதை அவர் சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார். பேட்டி ஒன்றில் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைவைத்து மருத்துவ பரிசோதனையில் இரட்டை கரு உண்டாகி இருப்பதை அவர் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டெல்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ₹2,500 வழங்கும் ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கான பதிவு மார்ச் 8ஆம் தேதி தொடங்குகிறது. சர்வதேச மகளிர் தினமான அன்று தொடங்கப்படும் பதிவை 45 நாட்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக எம்பி மனோஜ் திவாரி கூறியுள்ளார். மார்ச் 8ஆம் தேதி அன்று மகளிர் தினப் பரிசாக டெல்லியில் சிலிண்டர் விலை ₹500ஆக குறைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதிய நேரத்தில் பல ஊழியர்களும் ஆபீஸில் குட்டி தூக்கம் போடுவார்கள். ஆச்சர்யமாக, இது நல்ல விஷயம் தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தூங்காதவர்களை விட பெரும்பாலும் பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குமாம். மேலும், அவர்களுக்கு படைப்பாற்றல் அதிகரிப்பது, செயல்திறன் மேம்படுவது போன்ற அலுவலகத்திற்கு தேவையான சில நல்ல விசயங்களும் நடக்கின்றன. உங்க ஆபீஸில் தூங்க விட்டுருவாங்களா..?
வரத்து அதிகரித்ததால், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கத்திரிக்காய், பீட்ருட், நூக்கல், அவரைக்காய் 1 கிலோ ரூ.10ஆகவும், முள்ளங்கி, முட்டைக்காேஸ் ரூ.8ஆகவும் குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ ரூ.15ஆகவும், முருங்கைக்காய் ரூ.40ஆகவும், கேரட், உருளைக்கிழங்கு ரூ.15ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.18ஆகவும், பீன்ஸ் ரூ.25ஆகவும், சாம்பார் வெங்காயம் ரூ.30ஆகவும் சரிந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.