News March 3, 2025

2026 தேர்தல் அதிமுக கூட்டணி.. பாஜகவுக்கு மட்டும் ‘நோ’

image

2026 தேர்தலுக்கு தற்போதே கூட்டணி கணக்கை திமுக, அதிமுக வகுக்கத் தொடங்கியுள்ளன. திமுக தனது கூட்டணியைத் தக்க வைக்க முயற்சிக்கும் நிலையில், அதிமுக மெகா கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளை இழுக்கவும், விஜய் கட்சியை சேர்க்கவும் ஆர்வம் காட்டும் அதிமுக, பாஜகவை மட்டும் கூட்டணியில் சேர்க்கக் கூடாதென உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

News March 3, 2025

வங்கி டெபாசிட் ரூ.83.44 லட்சம் கோடியாக சரிந்தது

image

FDஇல் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவதால், வங்கியில் நடப்புக் கணக்கு, சேமிப்பு கணக்கு மீதான டெபாசிட் சரிந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் ரூ.83.50 லட்சம் கோடியில் இருந்து ரூ.83.44 லட்சம் கோடியாக டெபாசிட் குறைந்துள்ளது. இது கடந்தாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.5,900 காேடி குறைவு. 2023இல் 9 மாதங்களில் ரூ.78.27 லட்சம் கோடி- ரூ.78.69 லட்சம் காேடியாக (ரூ.42,000 கோடி) அதிகரித்திருந்தது.

News March 3, 2025

சீனியர்களுக்கு ‘டாட்டா’ காட்டும் திமுக

image

2026 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை திமுக முழு வேகத்தில் தொடங்கி விட்டது. அந்த வகையில், பார்த்த முகத்தையே பார்த்து மக்கள் சலித்துவிட்டதால் தேர்தலில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வியூக வகுப்பாளர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைப் படி, கட்சியில் சீனியர்களாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலருக்கு, வரும் தேர்தலில் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

News March 3, 2025

திமுக கூட்டணியில் கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்

image

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜெயக்குமார் மேலும் தீயை பற்ற வைத்துள்ளார். திமுக கூட்டணி உடையும் என அவர் அளித்த பேட்டி, அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த கட்சி வெளியேறும் என ஜெயக்குமார் கூறாத நிலையில், திருமாவளவன் விசிக MLA எண்ணிக்கை குறித்து பேசியது யூகங்களை கிளப்பியுள்ளது.

News March 3, 2025

கிர் பூங்காவில் ‘லயன் சஃபாரி’ செய்த பிரதமர் மோடி

image

சர்வதேச வனவிலங்கு தினத்தையொட்டி, குஜராத்தின் கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தை PM மோடி பார்வையிட்டார். அங்கு ‘லயன் சஃபாரி’ செய்த அவர், சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதுகுறித்து X பதிவில், பூமியின் நம்பமுடியாத பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் எடுப்போம் எனவும், எதிர்கால சந்ததியினருக்காக உயிரினங்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 3, 2025

டீயில் விஷம் கலந்த காதலி.. வைரலாகும் வாட்ஸ்அப் மெசேஜ்

image

விழுப்புரம் அருகே கல்யாணம் செய்ய மறுத்த காதலனுக்கு இளம்பெண் டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதோடு, ‘முடிந்தால் உயிர் பிழைத்துக்கொள்’ என வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்றையும் அவருக்கு அனுப்பியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் ஜெயசூர்யா ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ள நிலையில், இளம்பெண் ரம்யாவின் மெசேஜை பகிர்ந்து ஏன் இந்த கொலை வெறி? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News March 3, 2025

டி.கே. சிவக்குமார் முதல்வராவார்: காங்கிரஸ் MLA

image

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் உள்ளனர். இந்நிலையில் டிசம்பருக்குள் கர்நாடக முதல்வர் மாற்றப்பட்டு, டி.கே. சிவக்குமார் முதல்வராவார் என்றும், இதை ரத்தத்தில் எழுதி தருகிறேன் எனவும் காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜூ கூறியுள்ளார். அடுத்த கர்நாடகத் தேர்தலிலும் காங்கிரசே வெற்றி பெறும், அதன்பிறகும் டி.கே. சிவக்குமாரே முதல்வராவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 3, 2025

அதிகமாக பொய் சொல்வது யார்! ஆண்களா..? பெண்களா?

image

ரிலேஷன்ஷிப்பில் பெண்களை விட ஆண்களே அதிகமாக பொய் சொல்கிறார்கள் என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுக்கு பெண்கள் சராசரியாக 728 பொய்களைச் சொல்கிறார்கள் என்றும், ​​ஆண்கள் 1,092 பொய் சொல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக, சோஷியல் மீடியாக்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாவில் தான் அதிகமாக பொய் சொல்கிறார்களாம். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News March 3, 2025

புதிய ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ₹8,000 நிவாரணம்

image

புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும், மீன்பிடி தடை கால சலுகைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீன்பிடி தடைக் காலத்தில், நிவாரணத் தொகையாக ₹8,000 வழங்கப்படுகிறது. இதற்கு முழுநேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவராகவும், 18- 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இனி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

News March 3, 2025

சீமான் மனு: தமிழக அரசு பதிலளிக்க SC உத்தரவு

image

நடிகையுடன் சமரசத்துக்கு முயற்சி எடுத்து வருவதாக <<15637221>>சீமான் <<>>தரப்பு தெரிவித்துள்ளது. SCல் சீமான் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில், ஏற்கெனவே 2 முறை நடிகை வழக்கை வாபஸ் பெற்றதை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், சமரசத்துக்கான வழிகளை பரிசீலிக்க கேட்டுக் கொண்டனர். மேலும் TN அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!