News March 3, 2025

தனுஷ் ரசிகர்களுடன் ஒரண்டை இழுக்கும் அஜித் ரசிகர்கள்

image

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யும், தனுஷின் ‘இட்லி கடை’யும் ஒரே நாளில் ஏப்.10ம் தேதி வெளியாகிறது. இதுநாள் வரை விஜய் ரசிகர்களுடன் மல்லுக்கட்டிய அஜித் ரசிகர்கள், தற்போது தனுஷ் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. ‘எங்களுக்கு போட்டி யாரும் கிடையாது; இட்லி கடை எல்லாம் பின்வாங்க வேண்டும். இல்லையென்றால் நொறுக்கப்படும்’ என்று குட் பேட் அக்லியின் மாஸ் சீன்களை மீம்ஸ் போல் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News March 3, 2025

விதிமீறும் தனியார்.. டாஸ்மாக் அருகே பார்களில் மதுவிற்பனை

image

டாஸ்மாக் அருகே தனியாரால் குத்தகை எடுக்கப்பட்டு பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பார்களில், விதிகளுக்கு புறம்பாக மதுவகைகள் விற்கப்பட்டு வருவதும், அடுப்பு மூலம் சமையல் நடப்பதும் ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அரசு விதி இருந்தும், அதை தனியார் மீறுவதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

News March 3, 2025

தேர்தலுக்கு முன் திமுக கூட்டணி உடைகிறது?

image

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, 2 இடதுசாரிகள் அங்கம் வகிக்கின்றன. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே, திமுக கூட்டணியில் விசிக நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய விவகாரம், பாஜகவுடனான திமுக நெருக்கத்தால் 2 இடதுசாரி கட்சிகளும் அதிருப்தியில் உள்ளன. இதனால் திமுக கூட்டணியில் இருந்து 3 கட்சிகளும் விலகக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News March 3, 2025

KKR புதிய கேப்டன் ரஹானே

image

நடப்பு சாம்பியன் KKR கேப்டனாக ரஹானே, துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். KKR கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால், அவருக்கு பதில் KKRஇன் புதிய கேப்டன் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இதில் 30 வயதான வெங்கடேஷ் தலைமை பொறுப்பில் இருந்தது இல்லை. இதன் காரணமாக IPLலில் நீண்ட அனுபவம் உள்ள ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News March 3, 2025

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு

image

ஜல்லி, எம் சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜல்லி வகைகளின் விலை ₹4,000லிருந்து ₹3,400ஆக குறைந்துள்ளது. அதேபோல, GSP, Wed Mix (எம் சாண்ட்) ஆகிய பொருட்களின் விலை ₹4,000லிருந்து ₹3,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் புதிதாக வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விலை குறைப்பு சற்று நிம்மதி அளித்துள்ளது.

News March 3, 2025

சீமானுக்கு மத்திய அரசு பாதுகாப்பு?

image

சீமானுக்கு விரைவில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் குறித்த சர்ச்சை கருத்துக்கு பின், சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சீமான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அதிகாரிகள் அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2025

திருமணம் முடிந்த மறுநாளே பிறந்த குழந்தை..!

image

உ.பி.யில் திருமணம் முடிந்த மறுநாளே பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அது எப்படி 2 நாள்’ல குழந்தை பிறக்கும் என பையன் வீட்டார் அதிர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டு மே மாதமே திருமணம் முடிவானதால், இருவரும் தனிமையில் சந்தித்ததன் விளைவே இந்த நிலை எனப் பெண் வீட்டார் கூற, அக்டோபரில் தான் நிச்சயமானது, அப்பெண்ணை ஏற்க மாட்டோம் என மாப்பிள்ளை வீட்டாரும் சொல்கிறார்கள். இருந்தாலும், வயிறை எப்படி மறச்சாங்க..?

News March 3, 2025

மருத்துவர்கள் நியமனத்தில் சமூக அநீதி: அன்புமணி

image

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என அன்புமணி கூறியுள்ளார். கொளத்தூரில் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் கூட இல்லை எனவும், மருத்துவர்களை பணியமர்த்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவர்களை புதிதாக நியமிக்காமல், அரசு அலட்சியம் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News March 3, 2025

ரோஹித்துக்கு சப்போர்ட்.. காங்கிரசை விளாசிய BCCI!

image

<<15635681>>காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவின்<<>>, ரோஹித் மீதான கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவரின் கருத்திற்கு பதிலளித்துள்ள BCCI, ‘இந்திய அணி முக்கியமான தொடரின் மத்தியில் இருக்கும் நேரத்தில், இக்கருத்துகள் வீரர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும்’ என கண்டனம் தெரிவித்துள்ளது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷாமா தனது X தளப் பதிவை சைலண்டாக டெலிட் செய்து விட்டார்.

News March 3, 2025

5 ஆஸ்கர் வென்ற பாலியல் தொழில் பெண்ணின் கதை!

image

97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் படமான ‘அனோரா’ 5 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பணக்கார இளம் கதாநாயகன், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண் மீது காதல் வயப்படுவதே இந்த அனோரா படத்தின் கதை. பாலியல் தொழிலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 5 ஆஸ்கர்கள் வென்றது குறித்து நெட்டிசன்கள் வியந்து கவனித்து வருகிறார்கள்.

error: Content is protected !!