News March 3, 2025

கலக்கத்தில் ஓலா ஊழியர்கள்… 5மாதங்களில் 2-ஆவது முறை

image

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் ஓலா நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட அதன் சிஇஓ பவிஷ் அகர்வால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓலா நிறுவனம் கடந்த நவம்பரில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 3, 2025

கடன்கார மாநிலமாக மாற்றிய திமுக: அண்ணாமலை

image

தமிழகத்தை நம்பர் 1 கடன்கார மாநிலமாக DMK மாற்றியுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-24 வரை நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை திமுக அறியாமல் இருப்பது ஆச்சரியம். மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?. வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு (அ) கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

News March 3, 2025

நடிகர் ஷிஹான் உசேனி ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

பிரபல நடிகர் ஷிஹான் உசேனி சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல், ரஜினி, சரத்குமார், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த அவர் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ICUவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

News March 3, 2025

ஏப்ரல் 24இல் ‘கேங்கர்ஸ்’ அடாவடி ஆரம்பம்

image

சுந்தர்.சி – வடிவேலு ‘ஹிட்’ கூட்டணியில் உருவாகும் ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதில் பல முக்கிய காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு, சுந்தர் சி காம்போவில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 3, 2025

அதிகாரமிக்க பதவிகளில் இடஒதுக்கீடு கிடையாதா?

image

இடஒதுக்கீடு முறை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் நியமனங்கள் போன்ற அதிகாரமிக்க பதவிகளில் இடஒதுக்கீடு என்பதே இல்லை. அதிலும் குறிப்பாக, ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் இடஒதுக்கீடு கிடையாது. அதிகாரமிக்க பதவிகளில் இடஒதுக்கீடு ஏன் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் விளக்கம் அளிக்கவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

News March 3, 2025

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இத்தனை பேர் ஆப்சென்ட்டா?

image

பிளஸ் 2 பொதுத்தேர்வின் முதல் நாளே அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு நடந்த பிளஸ் 2 தமிழ் தேர்வில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 568 மாணவர்கள் தேர்வு எழுதுவதாக இருந்தது. ஆனால், அவர்களில் 11,430 மாணவர்கள் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகினர். தாய்மொழியாம் தமிழ் மொழி தேர்விலேயே இத்தனை மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 3, 2025

அதிமுகவில் இருந்து விலகல்.. இதே தேதியில் அன்று

image

2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தார் சசிகலா. பெங்களூரூவிலிருந்து பெரும் படை சூழ ஊர்வலமாக வந்த விதம் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்பது போல சசி என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீர் திருப்பமாக அரசியலிலிருந்து விலகல் அறிவிப்பை இதே தேதியில் (2021 மார்ச் 3) வெளியிட்டார். அரசியல் விலகலை அறிவித்த பிறகும் இன்று வரை அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறி வருகிறார்.

News March 3, 2025

LAUREUS விருதுக்கு பண்ட் பெயர் பரிந்துரை

image

LAUREUS விருதின் ‘Comeback of the year’ பிரிவிற்கு பண்ட் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2022ல் கார் விபத்தில் சிக்கியதால் பண்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக பேசப்பட்டது. ஆனால், தனது கடின உழைப்பு மூலம் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில், விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் LAUREUS விருதுக்கு சச்சினுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட 2வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார்.

News March 3, 2025

புதினை விட பெரிய ஆபத்து இதுதான்: டிரம்ப்

image

ரஷ்ய அதிபர் புதினை விட அமெரிக்காவுக்குள் ஊடுருவும் பலாத்கார கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தான் ஆபத்தானவர்கள் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், புதினை நினைத்து கவலைப்படுவதற்கு பதிலாக ஊடுருவல்காரர்கள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்காவும் ஐரோப்பாவை போல மாறிவிடும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

News March 3, 2025

பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ் காலமானார்

image

ஒலிம்பிக் போட்டிகளில் 3 முறை தங்கப் பதங்கங்களை வென்ற பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ் (Buvaisar Saitiev) காலமானார். அவருக்கு வயது 49. ரஷ்யாவை சேர்ந்த சைட்டீவ் 1996, 2004, 2008இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியவர். 2009 இல் ஓய்வை அறிவித்தபோது அந்நாட்டின் பார்லிமெண்ட்டில் செனட் உறுப்பினர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!