India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பொதுவெளியில் ஒரு பெண்ணை திமுக எம்.பி. ஆ. ராசா கட்டிப்பிடிப்பதை போன்ற ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி விமர்சனத்தை எழுப்பி வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து FACTCHECK குழு நடத்திய சோதனையில் அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் எனத் தெரியவந்துள்ளது. NCP MP சுப்ரியா சுலேவும், ஆதித்யா தாக்கரேவும் இருக்கும் ஃபோட்டோவை மார்ஃபிங் செய்து இந்த போலி புகைப்படத்தை சிலர் உருவாக்கியுள்ளனர்.
➤மேஷம் – ஆக்கம் ➤ரிஷபம் – அச்சம் ➤மிதுனம் – ஓய்வு ➤கடகம் – புகழ் ➤ சிம்மம் – பிரீதி ➤கன்னி – ஊக்கம் ➤துலாம் – தனம் ➤விருச்சிகம் – நலம் ➤தனுசு – வெற்றி ➤மகரம் – போட்டி ➤கும்பம் – தெளிவு ➤மீனம் – லாபம்.
நீட் ரகசியம் பொய் என ஒப்புக்கொண்டு, இனியாவது நீட் மரணங்களை திமுக அரசு தடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் திண்டிவனத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பு எனக் கூறிய அவர், பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை குழப்பத்தில் வைத்திருக்கும் Daddy, Son ( ஸ்டாலின், உதயநிதி) நீட் ரகசியத்தை உடனடியாக சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமும் இரவில் யூடியூப் வீடியோஸ், வெப்சீரிஸ், ரீல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? இத கவனிங்க. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை.,யின் ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம்.
நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!
மூச்சுத் திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த உடன், முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாகையில் இருந்து சென்னை திரும்புவதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. இன்று இரவு சென்னை வந்த உடனே ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிய இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் இருந்த உறவினர்கள் உடனே அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
❤️முடிந்தவரை இருவரும் சேர்ந்து சாப்பிடுங்கள் ❤️பார்ட்னருக்கு உணவை பரிமாறுங்கள். ❤️சாப்பிடும்போது பார்ட்னரின் சமையலை பாராட்டுங்கள் ❤️எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாடுங்கள் ❤️ஒருவரை ஒருவர் குறை கூறாதீர்கள் ❤️சாப்பிட்ட பின் இருவரும் சேர்ந்து ஒரு வாக் செல்லுங்கள் ❤️நல்ல விஷயங்களை சுட்டிக் காட்டுங்கள் ❤️ஒரு நாளைக்கு 5 முறையேனும் ஐ லவ் யூ சொல்லுங்கள். உங்க ஐடியாவையும் கமென்ட் பண்ணுங்க.
சாம்பியன்ஸ் டிராபியின் மாபெரும் போட்டியாக நாளை நடக்கும் முதல் செமி பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. CT வரலாற்றில் இந்தியா 3 முறையும், ஆஸி., 2 முறையும் வென்றுள்ளன. ஒரு மேட்ச் டிராவில் முடிந்தது. லீக் சுற்றில் 3 ஆட்டங்களையும் வென்று கெத்தாக நுழைந்துள்ளது இந்திய அணி, 2023 உலகக் கோப்பை பைனலில் தோல்வி அடைந்ததற்கு ஆஸி.யை பழிதீர்க்க காத்திருக்கிறது. இதில் வெல்லப் போவது யார்?
Sorry, no posts matched your criteria.