News March 4, 2025

5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

அய்யா வைகுண்டரின் 193ஆவது அவதார தினத்தையொட்டி இன்று (மார்ச் 4) நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்காது. அதேபோல, மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News March 4, 2025

60% போக்சோ வழக்குகள் நிலுவையில்.. ராமதாஸ் சாடல்

image

60% போக்சோ வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார். 2015-22 வரை 21,672 போக்சோ வழக்குகள் பதிவானதாகவும், அதில் 30% போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஓராண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டிய இவ்வழக்குகள், இன்று வரை தேங்கி இருப்பதற்கு TN அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.

News March 4, 2025

இந்திய வரலாற்றில் முதல் முறையாக..

image

இந்தியாவில் முதல்முறையாக உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. 20 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டிகள், வரும் 11- 13ஆம் தேதி வரை டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும். 3 நாள்களில் மொத்தம் 90 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டி தொடர்களுக்கான ஒரு உதாரணமாக, இப்போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News March 4, 2025

சூர்யா பட ஷூட்டிங்கில் நடிகைக்கு காயம்

image

‘சூர்யா 45’ படத்தில் ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சி எடுக்கும் போது காயம் ஏற்பட்டதாக, போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் வைத்துள்ளார். கையில் லேசான சிராய்ப்புகள் காணப்படுகின்றன. இப்படத்தின் ஷூட்டிங் கோவை, பொள்ளாச்சி, சென்னை பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

News March 4, 2025

ஆண்களே, இந்த 7 அறிகுறிகளை கவனிங்க!

image

இதய-ரத்தநாள நோய்களால் இறக்கும் ஆண்களில் 85% பேருக்கு மாரடைப்பு & இதயத்தாக்கு பாதிப்பு தான் மரணத்துக்கு காரணமாகிறது. அதன் அறிகுறிகளை முன்கூட்டி அறிந்து ஆபத்தை தடுக்கலாம். அவை: *நெஞ்சு வலி, அசவுகரியம் *வலியோ, இறுக்கமோ சில நிமிடங்கள் தாக்கலாம். தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை வரை பரவலாம் *மூச்சுத்திணறல் *உடலின் மேல்பாதியில் வலி *திடீரென அதிக வியர்வை *குமட்டல், வாந்தி *தலைச்சுற்றல் *அசாதாரண சோர்வு.

News March 4, 2025

இவரா அந்த பாலியல் குற்றவாளி?

image

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்‌ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சிவசேனா கட்சி (ஷிண்டே) நிர்வாகி பியூஷ் எனத் தெரியவந்துள்ளது. இவரது தலைமையிலான குழுவே, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. பியூஷ் முன்னதாக பாஜக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் மொத்தம் 7 பேர் மீது போக்சோ பாய்ந்துள்ளது.

News March 4, 2025

ஃபைனல் செல்லுமா இந்தியா?

image

இந்தியா- ஆஸி. அணிகளுக்கு இடையிலான CT தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணிக்கு துபாயில் போட்டி தொடங்குகிறது. உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸி.யை பழிதீர்க்க இந்தியா எதிர்பார்த்து இருக்கிறது. அதேபோல், இந்த போட்டியை வென்று, ஃபைனலுக்குச் செல்ல ஆஸி. அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது.

News March 4, 2025

ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

image

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

மார்ச் 4: வரலாற்றில் இன்று

image

*1924 – தமிழ் தேசிய போராளி புலவர் கு. கலியபெருமாள் பிறந்தநாள். *1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் உப்பை பயன்படுத்தவும் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் – மகாத்மா காந்தி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. *1938 – விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள். *தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.

News March 4, 2025

5 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ‘அனோரா’ OTT ரிலீஸ்

image

5 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய ‘அனோரா’ திரைப்படம், மார்ச் 17ல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் பாலியல் தொழிலாளிக்கும், ரஷ்ய தொழிலதிபருக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகளை பெற்ற பின்னர், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் அதிகரித்துள்ளது. மிக்கி மேடிஸன், மார்க் எடெல்ஷ்டின் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

error: Content is protected !!