India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நேற்று முதல் நிறுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான அமைதிப்பேச்சு வார்த்தைக்கு உக்ரைனை சம்மதிக்க வைக்கவும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்தவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் நீண்ட காலம் செயல்பட முடியாது எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஸி. அணியில் ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக அணியில், கூப்பர் கோனொல்லி சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாகவே முக்கிய வீரர்கள் விலகிய போதிலும், ஆடிய 2 போட்டிகளில் ஆஸி. வெற்றி பெற்று, தனது வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அரையிறுதியில் யார் வெற்றி பெறுவார்கள்?
லக்ஷ்மியின் அருளைப் பெற்று வாழ்வில் செல்வ செழிப்பு அடைய இந்த லக்ஷ்மி காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத் பொருள்: மகாலட்சுமியே, உங்கள் இருப்பை உணர்கிறேன் விஷ்ணுவின் அன்புக்குரியவரான உங்களை தியானிக்கிறேன்! என்னை செழிப்பாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
கோவையில் நேற்று நடந்த எஸ்.பி.வேலுமணியின் மகன் <<15640305>>திருமண விழாவில்<<>> இபிஎஸ் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுவதை இச்சம்பவம் உறுதி செய்வதாக பலரும் கருத்து கூறினர். இந்நிலையில், வரும் 10ஆம் தேதி கொடிசியாவில் நடைபெறவுள்ள வரவேற்பு விழாவில் இபிஎஸ், பங்கேற்க உள்ளதாகவும், தொலைபேசி வாயிலாக நேற்று வாழ்த்துக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த ஒரு சூழலிலும் இந்தியாவில் மட்டும் பிகினி அணிய மாட்டேன் என ரஜினியின் ‘லிங்கா’ பட ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார். யார் எங்கிருந்து, எப்போது போட்டோ எடுப்பார்கள் எனத் தெரியாததால், அதை மட்டும் செய்யவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், வெளிநாடுகளில் இது சாதாரணம் என்பதால், எந்த ஒரு அச்சமும் இல்லாமல் பிகினி அணிந்து குளிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க இஸ்ரேல் மீண்டும் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த காஷ்மீர் ஒற்றுமை தின நிகழ்ச்சியில், லக்ஷர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் POKல் பங்கேற்றதை இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அறிவித்த போதிலும், இந்தியா இதுவரை அதை செய்யவில்லை.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத்தொகை ₹6 லட்சத்தில் இருந்து ₹8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித் தொகையை ₹350ல் இருந்து ₹500ஆக உயர்த்தி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மூச்சுத் திணறல் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாவை நேரில் சந்தித்து CM ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நேற்று இரவு, தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த உடனே, அவர் நாகை சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சென்னை விரைந்தார். நள்ளிரவில் ஹாஸ்பிட்டலுக்கு சென்று தாயாரின் உடல்நிலையை கேட்டறிந்தார்.
வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இரவில் லேட்டாக தூங்கி காலையில் லேட்டாக எழுவது தற்போது அதிகமாகியுள்ளது. ஆனால் இது மனநிலை பிரச்னைகளை 30% அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மனக்கவலை, மனச்சோர்வு, எரிச்சல் போன்றவற்றை இது ஏற்படுத்தும். மேலும், ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு, உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.
2024-25 பார்வையாளர்கள் மாநாட்டை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், இந்திய மாணவர்கள் பலர், உலகின் முன்னணி கல்வி மையங்களை வளப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பல நாடுகள் வளர்ச்சியடைந்த பொருளாதார நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்களுடைய திறமையை நமது நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.