News March 4, 2025

’90 HRS WORK’ மனிதர்களுக்கா, ரோபோக்களுக்கா? அகிலேஷ்

image

தொழிலாளர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தவறான வாதம் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களுக்கும் தனிமனித சுதந்திரம், குடும்பம், பொழுதுபோக்கு இருப்பதை நிராகரிக்க முடியாது என்றார்.

News March 4, 2025

14 ஆண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா INDIA?

image

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸி., அணியை இந்தியா வென்றதில்லை. 2015, 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த 14 ஆண்டுகால மோசமான வரலாற்றை இந்திய அணி, ஆஸி.,க்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் வென்று மாற்றிக்காட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 4, 2025

பாஜகவின் திணிப்புகளை தமிழகம் ஏற்காது: கனிமொழி

image

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என்ற தரவுகளை அண்ணாமலை தர முடியுமா? என MP கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்திலுள்ள KV பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது அண்ணாமலைக்கு தெரியாதா என வினவிய அவர், தமிழக மாணவர்கள் மீது அக்கறையுள்ள பாஜக அரசு கல்வி நிதியை ஏன் நிறுத்தி என்றும் சாடினார். மேலும், பாஜகவின் அவதூறுகள், திணிப்புகளை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்றார்.

News March 4, 2025

அப்பல்லோ ஹாஸ்பிட்டல் விரைந்த மு.க.அழகிரி

image

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்த மு.க.அழகிரி, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். நேற்று இரவு தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து விரைந்த அவர், டாக்டர்களிடம் தாயாரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

News March 4, 2025

தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

image

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்று காலையில் நிஃப்டி 62.10 புள்ளிகள் சரிந்து 22,057.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 72,894.23 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News March 4, 2025

போராட்டத்தை தள்ளிப்போடும் ஜாக்டோ – ஜியோ

image

தேர்வு நேரம் என்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சமீபத்தில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்தக்கட்ட போராட்டத்தை, இம்மாதம் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், மாற்றப்பட்டுள்ளது.

News March 4, 2025

INDIA பேரை கேட்டாலே ஹெட் அடித்து நொறுக்குவார்: ஸ்மித்

image

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கும் என்றாலும், IND ஸ்பின்னர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவை வீழ்த்த தங்களிடம் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 4, 2025

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாள்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று (மார்ச் 4) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹8,010க்கு விற்பனையாகிறது. சவரன் ₹560 உயர்ந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்வை கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹107க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,07,000க்கும் விற்பனையாகிறது.

News March 4, 2025

கர்ப்பிணிகள் பாராசிட்டமல் எடுக்கிறீங்களா?

image

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது குழந்தைகளுக்கு ADHD குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக USA யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 307 பெண்களிடம் நடத்திய ஆய்வில், பாராசிட்டமால் சிசுவின் மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கவனக்குறைவு, அதீத செயல்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், குறைவாக பயன்படுத்துவது, ஆபத்தை குறைக்கும் என கூறுகின்றனர்.

News March 4, 2025

Whatsappல் வந்த கிஸ் Emoji… மனைவியை கொன்ற கணவன்!

image

கேரளாவில் பைஜூ(28) வைஷ்ணவி(27) தம்பதியின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர் விஷ்ணு(30). வைஷ்ணவியின் Whatsappக்கு விஷ்ணுவிடமிருந்து கிஸ் எமோஜி வந்துள்ளது. இதனால், கோபமடைந்த பைஜூ இது குறித்து கேட்க, பயத்தில் வைஷ்ணவி விஷ்ணு வீட்டுக்கு ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த, பைஜூ கத்தியால் வைஷ்ணவியை குத்திவிட்டு, விஷ்ணுவையும் கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்து விட, பைஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!