News March 4, 2025

CA தேர்வு முடிவுகள் வெளியீடு

image

ஜனவரி மாதம் நடந்த CA அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 533 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 21.52% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்திய அளவில் ஐதராபாத் மாணவி முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். முடிவுகளை <>https://icai.nic.in/caresult/<<>> என்ற தளத்தில் அறியலாம்.

News March 4, 2025

அறநெறி வளர்த்தவர் அய்யா வைகுண்டர்: அண்ணாமலை

image

அய்யா வைகுண்டரின் 193ஆவது அவதார தினத்தையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவர் அய்யா வைகுண்டர் என குறிப்பிட்டுள்ள அவர், மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, தர்மம் போன்ற அறநெறிகள் வளர்த்தவர் அய்யா வைகுண்டர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

News March 4, 2025

20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

image

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.

News March 4, 2025

அமெரிக்கா விதித்த 25% வரி முறை அமலுக்கு வந்தது

image

கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், சீனப் பொருட்கள் மீதான 10% வரி விதிப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள், போதைப்பொருள் நுழைவதை தடுக்கவும் இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் விளக்கமளித்திருந்தார்.

News March 4, 2025

உடல் பருமனால் இத்தனை சிக்கலா?

image

உடல் பருமன் உலகளவில் பெரும் தலைவலியாக பலருக்கு உள்ளது. ஆய்வின்படி, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளில் 5ல் ஒன்று இதனால் பாதிக்கப்படுகிறது. அதேபோல், பெரியவர்களில் 3ல் ஒருவருக்கு பாதிப்பு உள்ளது. உடல் பருமனால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்வது, துரித உணவுகளை தவிர்ப்பது இதனை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.

News March 4, 2025

வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்: CM ஸ்டாலின்

image

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக போராடியவர் என்றும், ‘எளியாரைக் கண்டு இரங்கியிரு மகனே, வலியாரைக் கண்டு மகிழாதே மகனே’ என அவர் போதித்துச்சென்ற வழி நடந்து மனிதம் காப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

அவதூறு பரப்புவது ஏன்? ரஷ்மிகா தரப்பு கேள்வி

image

கர்நாடகத்தை புறக்கணிப்பதாக காங்., MLA ரவிக்குமார் கவுடா குற்றச்சாட்டை ரஷ்மிகா தரப்பு மறுத்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ரஷ்மிகாவுக்கு அழைப்பு விடுத்தும், அவர் கலந்துகொள்ளவில்லை என எம்எல்ஏ குற்றஞ்சாட்டியிருந்தார். உண்மைக்கு புறம்பான இதுபோன்ற அவதூறுகளை நிறுத்துமாறும், தங்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் ரஷ்மிகா தரப்பு விளக்கமளித்துள்ளது.

News March 4, 2025

BREAKING: மகாராஷ்டிரா அமைச்சர் முண்டே ராஜினாமா

image

மகாராஷ்டிரா உணவுத்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் கடந்த டிச. மாதம் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்டார். இதில், அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், இந்த வழக்கில் அமைச்சரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து NCPயை சேர்ந்த முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

News March 4, 2025

மீண்டும் ஹாஸ்பிடல் விரைந்த முதல்வர் ஸ்டாலின்!

image

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் மீண்டும் விரைந்துள்ளார். நாகையிலிருந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய அவர், நேராக ஹாஸ்பிடல் சென்று தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். காலையில், மு.க.அழகிரி உள்ளிட்டோரும் சந்தித்த நிலையில், தற்போது 2ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் ஹாஸ்பிடல் விரைந்துள்ளார்.

News March 4, 2025

உங்களின் போன் ஹாக் ஆகாமல் இருக்க..?

image

*இமெயில், சோஷியல் மீடியா, ஆப், போனிற்கு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு போடுங்கள் *சந்தேகமான ஆப்களை Uninstall செய்யுங்கள் *செக்யூரிடிக்காக போனின் OSஐ அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் *பப்ளிக் WiFiகளை அதிகமாக யூஸ் பண்ண வேண்டாம். அப்படியே உபயோகித்தாலும், VPN பயன்படுத்தி யூஸ் செய்யுங்கள் *தெரியாத, Spam நம்பர்களில் இருந்து வரும் மெசெஜ், கால்களுக்கு பதிலளிக்க வேண்டாம். SHARE IT.

error: Content is protected !!