News March 4, 2025

அன்று முத்தத்தில் உலக சாதனை… இன்று விவாகரத்து

image

அதிக நேரம் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்த தாய்லாந்து ஜோடி விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது. எகாச்சாய் – லக்சனா தீரணரத் ஜோடி 2013ல் 58 மணிநேரம் 35 நிமிடங்கள் முத்தமிட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தனர். சுமார் 12 ஆண்டுகள் கழித்து, இவர்கள் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருப்பது, பலருக்கும் ஷாக்கிங் நியூஸ் தான். அன்று காதலின் சின்னமாக கொண்டாடப்பட்டவர்களுக்குள் இன்று என்ன பிரச்னையோ தெரியவில்லையே!

News March 4, 2025

UNO-வில் எதிரொலித்த மணிப்பூர்… இந்தியா எதிர்ப்பு

image

காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து UNO மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்த கருத்துகளுக்கு IND எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆதாரமற்ற கருத்துகள் அடிப்படை உண்மைக்கு மாறாக உள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் விளக்கமளித்தனர். முன்னதாக, காஷ்மீர் மற்றும் மணிப்பூரை குறிப்பிட்டு அமைதி மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வோல்கர் துர்க் வலியுறுத்தியிருந்தார்.

News March 4, 2025

பழிதீர்க்குமா இந்திய அணி?

image

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மதியம் 2:30 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. 2023 WC ஃபைனலின் தோல்வியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு, இன்று பதிலடி கொடுக்குமா இந்தியா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நீங்க சொல்லுங்க யார் ஜெயிப்பாங்க?

News March 4, 2025

ஓராண்டு நிறைவு.. அம்பானி வீட்டில் கொண்டாட்டம்!

image

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிகள் சுமார் 6 மாதங்கள் வரை நடைபெற்றன. குஜராத் ஜாம்நகரில் Hastakshar ceremony உடன் தொடங்கிய நிகழ்ச்சியில், உலக பிரபலங்கள் பில் கேட்ஸ், மார்க் சக்கர்பர்க், இவாங்கா ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

News March 4, 2025

மரண தண்டனை தராவிட்டால் தற்கொலை: நர்வால் தாயார்

image

காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக நர்வாலின் அம்மா கூறியுள்ளார். போலீசாரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்றும், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தர முடியாவிட்டால் தனது தற்கொலைக்கு ஹரியானா அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கரும்பு கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

image

2024 – 25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. 9.50% (அ) அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ₹3,151ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9.85% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,267ஆகவும், 10.10% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,344ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள்.

News March 4, 2025

விஜய் MGR-ஆக முடியாது: ஜெயக்குமார் விமர்சனம்

image

2026 தேர்தலில் ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு தவெக தலைவர் விஜய் காய் நகர்த்தி வருவதாக பேசப்படுகிறது. ஆனால், 2026-ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்பதாக அதிமுகவின் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அவ்வாறு பேசி வருவதாகவும், விஜய் ஒருபோதும் MGR ஆக முடியாது என்றும் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளார்.

News March 4, 2025

அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அமரன். மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார விழாவில் திரையிட அமரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த அறிவிப்பால் அமரன் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

News March 4, 2025

நம்மூரில் இந்த காண்டம் ஃபிளேவருக்கு தான் கிராக்கி!

image

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் அல்லவா! நம் ஊர் மக்களுக்கு இதுலயும் வடஇந்தியர்களின் டேஸ்டுடன் செட்டாகவில்லை. Manforce கம்பெனியின் நிறுவனர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மக்கள் அதிகளவில் மணக்கும் மல்லிப்பூ காண்டம் ஃபிளேவரை தான் லைக் பண்றாங்களாம். அதே நேரத்தில், நாட்டின் ஒரு இடத்தில் மட்டும் பான் ஃபிளேவர் காண்டமுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கிறதாம். இதுலயும் பான்! எந்த ஊரா இருக்கும்?

News March 4, 2025

அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

image

நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்க உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அரசின் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, தமாக, நாதக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!