News March 4, 2025

GOOD NEWS: பெண்களுக்கு சிறப்பு ஸ்பெஷல் அறிவிப்பு

image

மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான பெண்கள் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் இணைய <>WWW.TTDCONLINE.COM<<>>இல் புக்கிங் செய்யலாம். ஒருவருக்கு ₹3,150 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சுற்றுலாவின் போது இலவச விளையாட்டு போட்டிகள், மதிய உணவு, டீ, சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 25333444, 044- 25333333 மற்றும் +91 755 006 3121இல் தொடர்பு கொள்ளலாம்.

News March 4, 2025

நட்சத்திரங்களைக் பறிகொடுத்த இந்தியா

image

CT தொடரின் 1st Semi-Final-லில் ஆஸி., அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் இந்தியா 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா (28), கில் (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். தற்போது கோலி 18*, ஷ்ரேயாஸ் ஐயர் 20* ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர். இதேபோல் நிதானமாக விளையாடினாலே இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

News March 4, 2025

நாட்டின் சிறந்த சிற்பக் கலைஞர் காலமானார்

image

நாட்டின் மிகச்சிறந்த சிற்ப, ஓவியக் கலைஞரான ஹிம்மத் ஷா (92) ஜெய்ப்பூரில் காலமானார். வெகுஜனப் பரப்பில் அறியப்படாமல் இருப்பினும், இந்திய நவீன கலை உலகில் இவருக்கு தனிச் சிறப்பு உண்டு. கல், களிமண், காகிதம் என கையில் கிடைக்கும் எதையும் உயிர்ப்புள்ள கலைப் படைப்பாக மாற்றும் திறன் கொண்டவர் இவர். பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். இவரின் வெள்ளி இலை, தாமிர தலைகள் மற்றும் டெரகோட்டா சிற்பங்கள் புகழ்பெற்றவை.

News March 4, 2025

ஜெர்மனியில் நர்ஸ் வேலை: ரூ. 2 லட்சம் சம்பளம்!

image

ஜெர்மனியில் நர்ஸாக பணிபுரிய 6 மாத அனுபவம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களுக்கு ஜெர்மன் பயிற்றுவிக்கப்பட்டு ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் omclgerman2022@gmail.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in அல்லது 044-22505886 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மார்ச் 15 கடைசி தேதி.

News March 4, 2025

என்னது.. நம்ம ஊர்ல தங்கமா..!

image

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே, அதிக அளவில் தங்கம் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழத்திலும் தங்கம் கிடைக்க சாத்தியம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க சாத்தியக் கூறு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை, நம்ம ஊரிலேயே தங்கம் கிடைத்தாலாவது விலை குறையுமா?

News March 4, 2025

வாரம் 5 நாள்தான் வேலை: வங்கி சங்கங்கள் கடிதம்

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் வேலைப் பளுவால் கஷ்டப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

சாம்பியன்ஸ் டிராஃபியை இந்தியா வெல்லும்: கங்குலி

image

CT தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ODI) நுட்பமாக விளையாடும் திறமை கொண்டிருப்பதால் கோப்பையை வெல்வதில் சிரமம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், IND 2024இல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது, 2023இல் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

குழந்தை காப்பாற்ற முயன்று பலியான மொத்த குடும்பம்

image

உ.பி.,யில் புலந்த்ஷர் என்னுமிடத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, காரில் மகிழ்ச்சியாக வீடு திரும்பிய வழியில், திடீரென எதிரே குழந்தை ஒன்று வர, அதன் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது, கார் அருகிலுள்ள கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது. இதில் காரில் இருந்த 5 பேரில் 12, 15, 16 வயது சிறுவர்கள் உள்பட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 4, 2025

விராட் கோலி படைத்த மற்றொரு சாதனை

image

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை இந்திய நட்சத்திர வீரர் விராத் கோலி படைத்து வருகிறார். பேட்டிங்கில் எப்படி அவர் கிங் என அழைக்கப்படுகிறாரோ அதேபோல் பீல்டிங்கிலும் கோலி அசத்துவார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்சுகளை (235) பிடித்த வீரர் எந்த சாதனையை தனதாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

News March 4, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்?

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான பதிவில் #DMDKforTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில், சத்தியம் வெல்லும், நாளை நமதே எனக் குறிப்பிட்டு #DMDKforTN, #DMDKfor2026 என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!