India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கில் மத்திய அரசு, கூகுள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டீசரில் சிறுவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதை நீக்க கோரி, 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படம், சமூக எதார்த்தங்களை பதிவு செய்துள்ளதாக பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.
▶மார்ச்- 05 ▶மாசி – 21 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶நட்சத்திரம் : பரணி.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஒப்புக்கொண்டால் முதற்கட்டமாக கைதிகளை பரிமாறுவது, வான் வழி, கடல் வழி போரை நிறுத்த தாங்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு அடம்பிடித்து வந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கான ராணுவ நிதியை டிரம்ப் நேற்று நிறுத்தியதும், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கூகுள் மேப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான பாரத் பார்தி (43) என்பவர் தனது உறவினர் திருமணத்திற்காக நொய்டாவுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற அவரது கார், நேராக ஒரு கால்வாயில் விழுந்தது. இதில் காருக்குள் தண்ணீர் புகுந்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 1st Semi-Final-லில் AUS அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா (267/6) வீழ்த்தியது. ஆஸி., அணியில் கேப்டன் ஸ்மித் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். மற்ற வீரர்கள் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால், இந்திய அணியில் கேப்டன் சரியாக விளையாடாத போதும், பேட்டிங்கில் கோலி, ஷ்ரேயாஸ், ராகுல், ஹர்திக், பவுலிங்கில் ஷமி, ஜடேஜா, வருண் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற செய்தனர்
இன்று (மார்ச்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ கண்டோன்ட்மென்ட் மீது வெடிகுண்டு நிரப்பிய 2 கார்களில் வந்த தீவிரவாதிகள் இன்று மோதினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் கண்டோன்ட்மென்ட் சுற்றுச்சுவர் நொறுங்கியதுடன் அருகில் இருந்த 9 பேர் பலியாகினர். இதையடுத்து, மறைந்திருந்த தீவிரவாதிகள், கண்டோன்ட்மெண்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நாட்டிலேயே தமிழ்நாடு, டெல்லி, மற்றும் ஆந்திர மாநிலப் பெண்கள் தான் அதிக உடல்பருமன் கொண்டவர்களாக இருப்பதாக 2024-ம் ஆண்டு தேசிய குடும்ப நல சர்வேயில் (NFHS) தெரியவந்துள்ளது. டெல்லியில் 41.3% பெண்கள் (ஆண்கள் 38%), தமிழகத்தில் 40.4% பெண்கள் (ஆண்கள் 37%), ஆந்திராவில் 36.3 (ஆண்கள் 31.1%) உடல்பருமன் கொண்டவர்களாக உள்ளனர். உடல்பருமனே பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. இதை ஒரு மருத்துவ அவசரமாக கருதுமா அரசு?
➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – பயம் ➤ சிம்மம் – பகை ➤கன்னி – அமைதி ➤துலாம் – தெளிவு ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – உறுதி ➤மகரம் – பெருமை ➤கும்பம் – சாந்தம் ➤மீனம் – ஓய்வு.
தூங்கும் போது தலையணையின் கீழ் இந்த 5 பொருட்களை வைத்திருந்தால் அதிர்ஷ்டமும், பாசிட்டிவ் எனர்ஜியும் தேடி வரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 1) இரும்பு: பயத்தையும், கெட்ட கனவுகளையும் நெருங்க விடாது. 2) பூண்டு: நேர்மறை சிந்தனைகளை கொடுக்கும். 3) சதகுப்பி விதைகள்: ராகு தோஷத்தை போக்கும். 4) பச்சை ஏலக்காய்: ஆழ்ந்த உறக்கத்தை தரும். 5) கல் உப்புடன் ஒரு ரூபாய் நாணயம்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Sorry, no posts matched your criteria.