News March 5, 2025

தினமும் உணவில் மிளகாய் சேர்க்கிறீர்களா?

image

பச்சை மிளகாயில் பல நன்மைகள் அடங்கியிருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஏ, பி5 உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. செரிமான பிரச்னைகள், எடை குறைப்பு, பார்வை மேம்படுவதற்கு, சரும ஆரோக்யத்திற்கும் இவை சிறந்தவை. நாளொன்றுக்கு 2-3 மிளகாய்களை சேர்த்துக் கொள்வது நல்லது.

News March 5, 2025

மாட்டுத் தோலை பயன்படுத்தி லாபம் ஈட்டுங்கள்: அமித்ஷா

image

மாட்டு சானத்தை மட்டுமில்லாமல், மாடுகளின் தோல் மற்றும் எலும்புகளை பதப்படுத்தி பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இவற்றை வணிகர்களுக்கு விற்பதற்கு பதிலாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதப்படுத்தி, காலணி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்றால், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனவும் அவர் யோசனை கூறியுள்ளார்.

News March 5, 2025

ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா!

image

டெஸ்ட், டி20, ODI என அனைத்து ஃபார்மேட் ICC உலக தொடர்களிலும், அணியை ஃபைனலுக்கு வழிநடத்திய ஒரே கேப்டனாக ரோஹித் ஷர்மா உருவெடுத்துள்ளார். அதிக POTM விருதுகளை வென்றவர்களின் பட்டியலில், கோலி 4ஆம் இடத்திற்கு (7 விருதுகள்) முன்னேறியுள்ளார். குறைந்த இன்னிங்ஸில் 3,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில், கே.எல்.ராகுல் (78 இன்னிங்ஸ்) 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

News March 5, 2025

தேர்வுக்கு பயந்து 2,000 கி.மீ பயணித்த சிறுவன்

image

பிளஸ் 1 படிக்கும் சிறுவன் ஒருவன், தேர்வுக்கு பயந்து, 2,000 கி.மீ பயணித்த திடுக் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கடந்த பிப்.21ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ரயிலில் சென்றுள்ளான். பின்னர், அங்கிருந்து கிருஷ்ணகிரி வந்து, அங்கு, கட்டுமான வேலை செய்துள்ளான். இதை அறிந்த போலீசார் அவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பயப்படலாம் அதுக்குனு இப்படியா.

News March 5, 2025

ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

image

*அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். *எல்லாப் பேய்களும் இங்கே இருப்பதால், நரகம் வெறுமையாக உள்ளது. *புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். *ஒரு முட்டாள் தான் ஒரு புத்திசாலி என்று நினைக்கிறான், ஆனால் ஒரு புத்திசாலிக்கு தான் ஒரு முட்டாள் என்று தெரியும். *ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இல்லை.

News March 5, 2025

MLAக்கள் ரிலாக்ஸ் ஆக ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்

image

ஆந்திர சட்டசபை அழுத்தங்களில் இருந்து ரிலாக்ஸ் ஆக, அம்மாநில MLAக்களுக்கு விளையாட்டு, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. வரும் 18 முதல் 20ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும், MLAக்கள் தங்களது திறமைகளை காட்டலாம் எனவும் அம்மாநில சபாநாயகர் அய்யன்னா தெரிவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களை CM சந்திரபாபு நாயுடு கௌரவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2025

இரண்டே இந்தியர்கள் படைத்த சாதனை.. அதிலும் கோலி!

image

ODI சேஸிங்கில் 8,000 ரன்களை கடந்த 2ஆவது வீரராக கோலி உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கோலி இணைந்துள்ளார். 242 சேஸிங் போட்டிகளில், சச்சின் 8720 ரன்களை எடுத்திருக்கிறார். ஆனால், கோலியோ வெறும் 170 போட்டிகளிலேயே 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். AUSக்கு எதிரான நேற்றைய போட்டியில், 84 ரன்களை அடித்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

News March 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 197 ▶குறள்: நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. ▶பொருள்: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

News March 5, 2025

டிரம்புக்கே டஃப் கொடுக்கும் ட்ரூடோ!

image

$30 பில்லியன் மதிப்பிலான USA இறக்குமதி பொருள்களுக்கு, கனடா பிரதமர் ட்ரூடோ 25% வரி விதித்துள்ளார். கனடாவின் இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும், டிரம்பின் நியாயமற்ற செயல் தொடர்ந்தால், கூடுதலாக 125 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முன்னதாக, கனடா, மெக்ஸிகோ இறக்குமதிகளுக்கு டிரம்ப் 25% வரி விதித்திருந்தார்.

News March 5, 2025

படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டினர்: யோகி

image

கும்பமேளாவில் ₹7,500 கோடி முதலீடு செய்து, ₹3 லட்சம் கோடியை அரசு வருமானமாக ஈட்டியதாக உ.பி. முதல்வர் யோகி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டியதாகவும், நாளொன்றுக்கு அவர்கள் ₹50,000- ₹52,000 வரை வருமானம் ஈட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆள்கடத்தல், பாலியல் தொல்லை, திருட்டு, கொலை என ஏதாவது ஒரு குற்றத்தை காட்ட முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

error: Content is protected !!