India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் கவுரவம் பார்க்காமல் வாருங்கள் என 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தை பாஜக, நாதக, தமாக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், ப்ளஸ் 1 தேர்வு இன்று தொடங்குகிறது. அதேபோல், வரும் 28ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டங்களில் அதிகாலை, மாலை, இரவு என மாணவர்கள் எந்த வேளையிலும் படித்திட ஏதுவாக, தேர்வு நாள்களில் தடையின்றி மின்சாரம் வழங்க மின்சாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாதம் ₹82,000 சம்பளம் வாங்கியும் போதவில்லை என ஒருவர் Reddit தளத்தில் போட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது. ஹோம் லோன் கட்ட வேண்டும், அது போக விலைவாசி ஏற்றத்தால் இந்த சம்பளம் போதவில்லை என்கிறார் அவர். அதனால், பார்ட் டைம் வேலை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் ஒரு Upper Middle Class பிரிவினரின் வாழ்க்கை சூழலை, இந்த பதிவு படம் போட்டு காட்டுவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இளையராஜாவிடம் இருப்பது தான் என்ற அகந்தை அல்ல, அது தன்னை உணர்ந்த மெய்ஞானத்தின் வெளிப்பாடு என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரை இசைஞானி என்பதை விட மெய்ஞானி என அழைப்பதே பொருந்தும் எனவும், அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பது வியப்பை தருவதாகவும் திருமா கூறியுள்ளார். இசை என்னிலிருந்து வேறு அல்ல என்று கூறும்போது, அவரது கண்களில் ஞானஒளியை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என சௌமியா அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். முன்பின் தெரியாத, பழக்கம் இல்லாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், நமக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த பெற்றோர்களை மதித்து பழக வேண்டும் எனவும் கூறியுள்ளார். முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் சிறந்த உயர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க உள்ள புதிய படத்தில், 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்க்ரிப்டின் படி 5 நடிகைகள் தேவைப்படுவதாகவும், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மெயின் ஹீரோயினாக ஜான்வி கபூரும், மற்றொரு இந்திய நடிகையும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதர்களின் மூளையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் அளவிற்கு பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக, கனடா ஆராய்ச்சியாளர்கள் ஷாக் தகவலை பகிர்ந்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை காட்டிலும், மூளையில் 7-30 மடங்கு அதிகமான நுண்துகள்கள் சேர்வதாகவும் அதிர்ச்சியளிக்கின்றனர். கேன் வாட்டரை தவிர்ப்பது இதற்கு 90% தீர்வாக அமையும் எனவும், பிளாஸ்டிக்கில் வைத்து கொடுக்கப்படும் உணவுகளை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சாதனை படைப்பதை விட அணி வெல்வதே முக்கியம் என கோலி தெரிவித்துள்ளார். AUSக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய அவர், இந்த போட்டியில் சதம் அடித்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும், ஆனால், அதை விட அணி வெல்வதே முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார். மேலும், சதத்தை தவற விட்டது தனக்கு வருத்தமில்லை எனவும், தனிப்பட்ட சாதனைகளை தான் எப்போதுமே யோசித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் ஏன் அவரது சொந்த தாய் நாடான தென்னாப்பிரிக்காவிற்கு செல்லக் கூடாது என USA ஜனநாயகக்கட்சி நிர்வாகி நிடியா வெலாஸ்குவெஸ் கேள்வி எழுப்பியுள்ளார். USA அரசு நிர்வாகத்தில் மஸ்க் கை நீண்டு வரும் நிலையில், ஜனநாயக் கட்சியினர் அவரது தேசிய வாதம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, அவர் 3 நாடுகளில் குடியுரிமை வைத்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் மார்சி விமர்சித்து இருந்தார்.
தோனியின் குடும்ப அலுவலகம், SILA என்ற முன்னணி ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. SILA நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த முதலீடு செய்துள்ளதாக தோனி அறிவித்துள்ளார். இருப்பினும் எவ்வளவு தொகை முதலீடு செய்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 125க்கும் மேற்பட்ட நகரங்களில் 20 கோடி சதுரஅடிக்கும் அதிகமான ரியல் எஸ்டேட்டை SILA நிர்வகித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.