News March 5, 2025

காய்கறிகள் விலை கடும் சரிவு.. விவசாயிகள் கவலை!

image

காய்கறிகள் விலை கடந்த ஒரு வாரத்தில் தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் இன்று(மார்ச் 5) ஒரு கிலோ தக்காளி- ₹12, பீட்ரூட்-₹10, கத்திரிக்காய்- ₹10, கேரட்- ₹15 – ₹30, முருங்கைக்காய்- ₹40, சின்ன வெங்காயம்- ₹18 – ₹25க்கு விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் மொத்த சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டு ₹60 – ₹100ஆக குறைந்துள்ளது. இந்த விலை குறைவு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

News March 5, 2025

SA vs NZ இன்று பலப்பரீட்சை.. யார் அடுத்த ஃபைனலிஸ்ட்

image

சாம்பியன்ஸ் டிராபி 2வது அரையிறுதியில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. லாகூரின் கடாபி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. பந்துவீச்சு, பேட்டிங் என இரு அணிகளுமே சமமான பலத்துடன் இருப்பதால், போட்டியில் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த மேட்சில் யார் வெற்றி பெறுவார்கள்?

News March 5, 2025

வெப்ப அலையால் இறந்தால் ₹4 லட்சம் நிவாரணம்

image

வெப்ப அலை காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கணேசன் அறிவித்துள்ளார். தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழிலாளர்களின் ஆரோக்கியம், நலனை உறுதி செய்வதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும் என்றார். தொழிலாளர்கள் உயிரைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும் நிறுவனங்களைக் கேட்டுகொண்டார்.

News March 5, 2025

4 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: IMD வார்னிங்

image

தமிழகத்தில் இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை, வெப்பநிலை இயல்பை விட 2–3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் குழந்தைகள், முதியோர்கள் மதியம் 12 – 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது. உடலில் நீர்சத்துக்களை தக்க வைத்து கொள்வது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் என சுகாதாரத்துறையும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

News March 5, 2025

ரயில்வே தேர்வில் மோசடி: 26 அதிகாரிகள் கைது

image

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவி உயர்வுக்கான தேர்வில் வினாத்தாளை லீக் செய்ததாக 26 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று நடைபெற இருந்த இத்தேர்வில் முறைகேடு நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகலை 17 பேர் வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 26 பேரும் ரயில்வே துறையில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 5, 2025

6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: தமிழக அரசு கோரிக்கை

image

6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கடிதம் வழங்கியுள்ளார். மத்திய அரசு இசைவு தெரிவிக்கும்பட்சத்தில், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் காஞ்சி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் விரைவில் அமையும். மேலும், கோவையில் AIIMS ஹாஸ்பிடல் கேட்டும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2025

ஞானத்தை அள்ளித்தரும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

பொருள்:
பேச்சு தெய்வத்தை நாம் தியானிக்கிறோம்,
ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும்.

News March 5, 2025

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி

image

பாகிஸ்தானில் ராணுவ வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு பகுதியில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.

News March 5, 2025

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்

image

2026 பேரவைத் தேர்தலுக்காகத் தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கெளஷிக் பாண்டியன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் களமிறங்குவார் என அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல் கட்சியாக வேட்பாளரை அறிவித்து தமிழக அரசியல் களத்தை நாதக சூடுபிடிக்க வைத்துள்ளது.

News March 5, 2025

பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள், பெற்றோர் தங்கள் புகார்கள், சந்தேகங்களை அறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383075, 9498383075 ஆகிய எண்களில் அழைக்கலாம். ALL THE BEST.

error: Content is protected !!