News March 5, 2025

தமிழகம் வரும் அமித்ஷா.. காவல்துறை முக்கிய உத்தரவு

image

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் பயிற்சி மையத்திற்கு நாளை வரவுள்ளதால், இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு இந்த தடை இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 5, 2025

PAKஐ கலாய்த்த சீனியர் வீரர்.. கலவரமான X!

image

இந்தியாவால் இறுதிப் போட்டி துபாய்க்கு மாறிவிட்டது. நெட்டிசன்கள் மீம்ஸை பறக்கவிட்டு வரும் சூழலில்,. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனும் பாகிஸ்தானை கலாய்த்துள்ளார். அவர், ‘சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் நன்றாக ஹோஸ்ட் செய்தது’ – எனப் பதிவிட்டார். உடனே, பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை டார்க்கெட் பண்ண, அவருக்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய ட்ரெண்டிங்காகவே இது மாறிவிட்டது.

News March 5, 2025

தொகுதி மறுசீரமைப்பு நமக்கான தண்டனை: விஜய்

image

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்திற்கான தண்டனை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டால் அதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 5, 2025

மாமியாருக்கு மயக்க மருந்து.. புதுமணப் பெண் பலே திருட்டு

image

மாமியாருக்கு டீயில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்துவிட்டு புதுமணப் பெண் ₹3.15 லட்சம் பணம் மற்றும் நகையுடன் மாயமான பலே சம்பவம் அரங்கேறியுள்ளது. உ.பி-யின் பன்சாலியில் திருமணம் நடந்து முடிந்த 5 நாள்களில் இந்த நூதன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். முன்பின் தெரியாத பெண்ணை தன் மகனுக்கு கட்டிவைத்து ஏமாந்துவிட்டேனே என இளைஞரின் தாய் போலீசாரிடம் கண்ணீர் வடித்துள்ளார்.

News March 5, 2025

ராமர் கோயிலை தகர்க்க ISI சதி

image

ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க PAK உளவு அமைப்பான ISI செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி.,யை சேர்ந்த அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர், ஹரியானாவின் பரிதாபாத்தில் உணவு விடுதியில் பணியாற்றி வந்துள்ளார். இந்த தீவிரவாத சதியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து மத்திய உளவுத்துறை விசாரித்து வருகிறது.

News March 5, 2025

அரசியல் கட்சிகளுடன் ஆலோசியுங்கள்: EC

image

தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண, அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டுமென, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடந்த அதிகாரிகள் மாநாட்டில் பேசிய அவர், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் முழு வீச்சில் செயல்படுமாறு கேட்டுகொண்டார். அரசியல் கட்சிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி, கருத்து பெறவும் கூறியுள்ளார்.

News March 5, 2025

பாடகி கல்பனாவின் ஹெல்த் Update!

image

தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இப்போது சுயநினைவை பெற்றுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. <<15653264>>கல்பனாவின் தற்கொலை<<>> குறித்து போலீசாரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வரும் கல்பனா, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலை பாடி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 5, 2025

மக்களின் உரிமையை மறுப்பதா? கார்கே கேள்வி

image

தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். ரேஷன் கார்டு பட்டியல்கள், வாக்காளர் பட்டியல், வங்கியில் பணம் வாங்கி நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதற்காக தெருக்களில் இறங்கி போராடவும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2025

காபி குடிச்சதும் தண்ணீர் குடிக்கிறீங்களா?

image

காபி குடித்ததும், தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. காபி குடித்த பிறகு நாக்கில் சுவை மொட்டுகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என தோன்றுவதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், இதனால் சில பிரச்னைகள் உண்டாகும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி பருகுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகலாம் *வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றில் உப்புசம் ஏற்படலாம். SHARE IT.

News March 5, 2025

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சீமான்

image

எஸ்.டி.பி.ஐ தலைவர் ஃபைசி கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் விமர்சித்துள்ளார். தன்னாட்சி அமைப்புக்களைத் தனது கைப்பாவையாக்கி, மத்திய அரசு அரசியல் எதிரிகளை தொடர்ந்து பழி வாங்குவதாகவும், இது நாட்டை பேரழிவை நோக்கிக் கொண்டு செல்லும் எனவும் அவர் சாடியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஃபைசியை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.

error: Content is protected !!