India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<15658082>>ஸ்டீவ் ஸ்மித்<<>> ODIல் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியே. இந்த ஜெனரேஷனின் ஆகச்சிறந்த வீரராக கருதப்படும் அவர், 170 ODIகளில் விளையாடி 12 சதங்கள், 35 அரைசதங்களுடன் 5,800 ரன்களை விளாசியுள்ளார். மேலும், 28 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். ICC தொடர்களில் அதிக அரைசதம் அடித்த ஆஸி. வீரர் என்ற சாதனையை ஸ்மித் (10) படைத்துள்ளார். அவரின் பெஸ்ட் ODI இன்னிங்ஸ் எது?
தென்மாநில CMகளை, தமிழ்நாடு CM ஸ்டாலின் சந்தித்துப் பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமெனில் ஒருமித்த கருத்தை உருவாக்கி கூட்டமைப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் எடுத்துரைத்துள்ளார். மத்திய அரசின் அணுகுமுறையை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் கூறியுள்ளார்.
வீட்டில் தவழ்ந்து விளையாடிய 7 மாத குழந்தையின் உயிரை பலூன் பறித்த அவலம் நடந்துள்ளது. தஞ்சை திருவோணம் அருகே பலூனை குழந்தை கையில் வைத்து விளையாடுவதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது. குழந்தைகள் தங்களது கைக்குக் கிடைக்கும் பொருட்களை வாயில் வைக்கும், இதனால் பெற்றோர்களே ஜாக்கிரதையாக இருங்கள் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் குறைந்துள்ளது என்றார். பொறுப்பேற்றதில் இருந்து 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு உள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல மூட நம்பிக்கைகள் இருக்கும். அதாவது, ராசியான சட்டை அணிவது, இருந்த இடத்தில் அசையாமல் போட்டியை பார்ப்பது என கூறலாம். அதற்கு ஆனந்த் மஹிந்திராவும் விதிவிலக்கு அல்ல. 2023ல் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததற்கு போட்டியை, தான் நேரில் பார்த்ததே காரணம் என முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்றையப் போட்டியை காணாததால் இந்திய வென்றது என அவர் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக குத்திக் கொன்ற இளைஞர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி்யுள்ளது. பெயிண்டராக பணிபுரிந்து வந்த பிரசாந்த் (29), பக்கத்து வீட்டில் வசிக்கும் ஐஸ்வர்யாவை (20) காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
தமிழுக்கான வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட ஒன்றுமே இல்லாததால்தான் புதுப் பிரச்னையை CM கையில் எடுத்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததும், ரயிலுக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டியதும் பாஜக தான். உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோதுதான் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கினார். அப்போது கேட்காமல், இப்போது குற்றம்சாட்டுவது நயவஞ்சகத்தனம் என சாடியுள்ளார்.
சாம்பியன் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நேற்று நடந்த செமி பைனல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், ஸ்மித் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
TNல் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை பெற நுகர்வோர் தங்கள் ஆதாரை, EB எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டுமென TN அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ள இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் EB எண்ணுடன் ஆதார் இணைப்பது இனி கட்டாயமாகும்.
லஞ்சப் புகாரில் பஞ்சாப் அரசு அதிகாரி முன்ஜாமின் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமூக முன்னேற்றத்தை தடுப்பது ஊழல்தான் என தெரிவித்தது. உயர் பதவிகளில் இருப்பவர்கள் செய்யும் ஊழல்தான் நாட்டின் பொருளாதார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகவும் நீதிபதிகள் காட்டமாக கூறினர். கூலிக்கு கொலை செய்பவர்களை விட, ஊழல்வாதிகள் தான் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.