News March 5, 2025

சினிமாவில் எனக்கு ஃபிரண்ட்ஸ் இருந்ததில்லை: சமந்தா!

image

சினி​மா​வில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சமந்தா, ஆரம்பத்தில் தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என தெரிவித்துள்ளார். அனைத்தையும் தானே கற்றுக்கொண்டதாக கூறிய, சினி​மா​வில் நண்​பர்​கள், உறவினர்​கள் என யாரும் இல்லை என்றார். இந்த 15 வருடத்தில், தன்னுடைய பலம், பலவீனத்தை தெரிந்து கொண்டதாகவும், அடுத்த 15 வருடத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பிடிச்ச சமந்தா படம் எது?

News March 5, 2025

SBI வாடிக்கையாளரா நீங்க..? கொஞ்சம் உஷாரா இருங்க!

image

SBI, தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. SBI என்ற பெயரில் வைரலாகி வரும் Deep Fake வீடியோவில் கூறப்படும் முதலீடுகளை நம்பி, அவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், SBI ஒருபோதும் அத்தகைய வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளாது என்றும் விளக்கமளித்துள்ளது. AI மூலம் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனப்படுகிறது. நீங்களும் உஷாரா இருங்க!

News March 5, 2025

பெண்களுக்கான வேலைவாய்ப்பு 48% உயர்வு

image

இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு கடந்தாண்டில் 48% அதிகரித்திருப்பது, Foundit அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. IT, Bank, இன்சூரன்ஸ், சுகாதாரம், AI துறைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாநிலங்களில் தலைநகருக்கு அடுத்தபடியாக உள்ள 2வது, 3வது நிலை நகரங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இது மேலும் உயர வாய்ப்புள்ளதாக Foundit தெரிவித்துள்ளது.

News March 5, 2025

CT செமி பைனல் 2: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு!

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடாபி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என நீங்க நினைக்குறீங்க? Stay tuned with Way2News for match updates.

News March 5, 2025

தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்!

image

தமிழகத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு இயல்பை விட 2°C வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மார்ச் மாதமாகியும் காலையில் பனிமூட்டம் நிலவுகிறது. ஆனால், காலை 8 மணிக்கு மேல் சம்மர் வந்ததைப் போல வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், அதிகாலை லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் IMDஅறிவித்துள்ளது.

News March 5, 2025

மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை.. காரணம் என்ன?

image

<<15656827>>தங்கம்<<>> விலை கடந்த வாரத்தில் 5 நாள்கள் சரிவைக் கண்டது. இந்த 5 நாள்களில் சரிந்த விலைக்கு நிகராக நேற்று ₹560, இன்று ₹440 என மீண்டும் ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வரும் சூழலில், மீண்டும் பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதன் தாக்கமே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

News March 5, 2025

வீடு ஜப்தி: ஐகோர்ட்டை நாடிய சிவாஜியின் மகன்!

image

திரைப்பட தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிவாஜியின் மூத்த மகன் ராம் குமார் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்ட வீடு, தனது சகோதரரான நடிகர் பிரபு பெயரில் இருப்பதாகவும், வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 5, 2025

சிமென்ட் விலை 7% குறைந்தது

image

நடப்பு நிதியாண்டின் ஏப். – ஜன. காலகட்டத்தில் சிமென்ட் விலை 7% வரை குறைந்துள்ளதாக மதிப்பீட்டு நிறுவனமான இண்ட்-ரா அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேவைக் குறைவு, முன்னணி நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டி ஆகியவை காரணமாக கடந்த நிதியாண்டைக் காட்டிலும் விலை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2024 நவம்பர் முதல் சிமென்ட் விலை அதிகரித்தாலும், அவை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவே எனக் கூறியுள்ளது.

News March 5, 2025

2ஆம் சுற்று ‘பிஎம் இன்டர்ன்ஷிப்’ வரும் 12ஆம் தேதி கடைசி நாள்

image

‘PM Internship’ 2ஆம் சுற்றுக்கு விண்ணப்பிக்க வரும் 12ஆம் தேதி கடைசி நாளாகும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு சுமார் 500 முக்கிய நிறுவனங்களில் பயிற்சியுடன் மாதம் ₹5000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 12 மாத பயிற்சிக்கு பிறகு ₹6,000 மானியம் வழங்கப்படுகிறது. 21 – 24 வயதுடைய வேலையில்லாத படித்த நபர்கள் <>pminternship.mca.gov.in<<>> இணையதளத்தில் உடனடியாக அப்ளை பண்ணுங்க.

News March 5, 2025

இப்போது என்ன தேவை வந்தது? கமல்

image

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு இப்போது பேச என்ன தேவை வந்தது என்பதை கவனிக்க வேண்டும் என மநீம தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கொள்கை முரண்களை விட்டுவிட்டு, அனைவரும் ஒன்றுகூட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். பாஜகவுக்கு சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாது, பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கலாம் என தி.க. தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!