News March 5, 2025

ஏற்றத்தில் SHARE MARKET… முதலீட்டாளர்கள் ஹேப்பி!

image

அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதால் இந்திய பங்குச் சந்தைகள் அண்மை காலமாக சரிவை சந்தித்து வருகின்றன. ஆனால், முதலீட்டாளர்களுக்கு இன்று சிறந்த நாளாகவே அமைந்திருக்கிறது. காலை ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, மாலையிலும் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்து 73,730 புள்ளிகளிலும், நிஃப்டி 254 புள்ளிகள் அதிகரித்து 22,337 புள்ளிகளிலும் வர்த்தகமாகி இன்றைய நாளை நிறைவு செய்தன.

News March 5, 2025

விட்ட இடத்தை பிடித்த ‘கிங்’ கோலி

image

ODI கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் கிங் கோலி. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நங்கூரமாக விளையாடினார் கோலி. அதுவும் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ODIயில் 51வது சதம் விளாசிய பின், ரசிகர்களை பார்த்து ‘நான் இருக்கிறேன்’ என GESTURE செய்தது ரசிக்கும்படியாக இருந்தது. ஆஸி.,க்கு எதிராகவும் சிறப்பாக விளையாட, தரவரிசையிலும் கிங் கோலிக்கு ஏறுமுகம் ஏற்பட்டுள்ளது.

News March 5, 2025

மணிப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

image

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.06 மணிக்கு 5.7, மதியம் 12.20 மணிக்கு 4.1 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பல இடங்களில் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான அசாம், மேகாலயாவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

News March 5, 2025

டிராகன் பட இயக்குநரை பாராட்டி தள்ளிய ரஜினி

image

டிராகன் படம் பலரின் மனம் கவர்ந்த படமாக அமைய, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் படம் மிகவும் பிடித்துள்ளது. உடனடியாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை வீட்டிற்கு அழைத்து அவர் பாராட்டியுள்ளார். கதை மிக அருமையாக இருந்ததாக ரஜினி சிலாகித்து பேசியுள்ளார். தனது கனவு நிறைவேறிய நாள் இது என ரஜினியுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அஷ்வத் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

News March 5, 2025

ரோஹித் சர்மா ஃபார்ம் முக்கியம் அல்ல… கம்பீர் ஆவேசம்!

image

இந்திய அணியை சிறப்பாக வழி நடத்துவதாக ரோஹித் சர்மாவுக்கு பாராட்டுகள் வந்தாலும், அவர் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனமும் எழுகிறது. CT அரையிறுதியில் வென்ற பிறகு பேட்டியளித்த பயிற்சியாளர் கம்பீரிடம், ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, ரன் அடிப்பது முக்கியமில்லை, ஒரு கேப்டனாக எத்தகைய தாக்கத்தை ரோஹித் ஏற்படுத்துகிறார் என்பதே முக்கியம் என கம்பீர் ஆவேசமாக கூறினார்.

News March 5, 2025

இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் மாடல்: லண்டன் பேராசிரியர்

image

இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் மாடல் என லண்டன் கிங்ஸ் பல்கலை.,யின் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜாஃபர்லாட் புகழ்ந்துள்ளார். கல்வி, தனிநபர் வருமானம், ஊட்டச்சத்து குறைபாடு என அனைத்து அளவுகோலிலும் தென் மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியாவுக்கென்று ஒரு மாடல் இருக்குமென்றால், அது தமிழ்நாடு மாடல்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News March 5, 2025

குலசை ராக்கெட் ஏவுதளம்: பூஜை போட்ட இஸ்ரோ அதிகாரிகள்

image

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்தியாவின் 4-வது மற்றும் தமிழகத்தின் முதலாவது ராக்கெட் ஏவுதளமாக இது அமைகிறது. இதற்காக தமிழக அரசு 2,233 ஏக்கர் நிலம் ஒதுக்கிய நிலையில், இன்று முதற்கட்ட பணிகளை இஸ்ரோ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அனைத்து பணிகளும் முடிந்தபின், சிறிய வகை ராக்கெட்டுகள் இங்கிருந்து ஏவப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 5, 2025

முட்டாள்கள் தினத்தால் வரி விதிப்பு தேதி மாற்றம்: டிரம்ப்

image

அமெரிக்கா மீது வரிகளை விதிக்கும் நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் அதிபர் டிரம்ப். அதே சமயம் இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியிருக்கிறார். முதலில் ஏப்ரல் 1 ஆம் தேதியே அமல்படுத்தலாம் என தான் நினைத்திருந்ததாகவும், ஆனால், அது முட்டாள்கள் தினம் என்பதால், தேதியை மாற்றிவிட்டதாகவும் காரணம் சொல்லி இருக்கிறார் டிரம்ப். SHARE IT

News March 5, 2025

கல்பனா தற்கொலை முயற்சி.. காரணம் வெளியானது

image

தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலுக்கு வந்த போலீசாரிடம், தற்கொலை முயற்சிக்கான காரணத்தையும் அவர் கூறினார்.
கேரளாவில் இருக்கும் தனது மூத்த மகள் படிப்பிற்காக ஹைதராபாத் வர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவள் அங்கேயே தங்குவதாகச் சொன்னாள். இதனால், மனமுடைந்து தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

News March 5, 2025

ஆஸ்கர் வாங்குனது மட்டுமில்ல; இதுலயும் சாதனை

image

ஆஸ்கர் விருது வாங்குவதே பெரிய சாதனை தான். அந்த நிகழ்ச்சியில் சத்தமே இல்லாமல் இன்னொரு சாதனையையும் செய்திருக்கிறார் நடிகர் அட்ரெய்ன் ஃப்ராடி. 1943ல் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் Mrs Miniver படத்திற்காக சிறந்த நடிகை விருதை பெற்ற கார்சன் 5 நிமிடங்கள் 30 நொடிகள் வரை உரையாற்றி இருந்தார். 82 ஆண்டுகளுக்குப் பின் அந்த சாதனையை அட்ரெய்ன் ஃப்ராடி முறியடித்து 5 நிமிடம் 40 நொடிகள் பேசியுள்ளார்.

error: Content is protected !!