India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்பியன் டிராபி 2வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் சதமடித்தார். 94 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவர் அவுட் ஆனார். விக்கெட் எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறுகிறது. நியூசிலாந்து 40 ஓவர்களில் 252 ரன்கள் குவித்துள்ளது.
திருப்பூர் SBI வங்கியில், வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்ததால், அவர்கள் அதிர்ச்சியடைந்து வங்கிக்கிளையை முற்றுகையிட்டுள்ளனர். ஒவ்வொருவரின் கணக்கில் இருந்தும் ₹10,000 முதல் ₹35,000 வரை மாயமானதாக, 35 பேர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கோயில் திருவிழாக்களின்போது சினிமா பாடல்களை பாடுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி கோயிலுக்குள் பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். ஆபாச நடனங்கள், அதைத் தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பக்தர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில், தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பதாக உதயநிதி விமர்சித்துள்ளார். இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று வீழ்த்த வேண்டும். இந்த தீங்கு குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வது நமது கடமை. நமது உரிமைகளை பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் என கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ ஒருவர் குட்காவை உட்கொண்டு துப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளானது. இதற்கு சபாநாயகர் சதீஷ் மகானா ஏற்கனவே கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தற்போது சட்டமன்றத்தில் பான் மசாலா, குட்கா பயன்படுத்துவதற்கு அவர் தடை விதித்துள்ளார். இதை மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
சாம்பியன் ட்ராபி 2வது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை திணறடித்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, 93 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ரச்சினுக்கு இணையாக நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து நிதானமாக விளையாடி வருகிறார்.
மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அருகே பள்ளி பேருந்திலேயே 5 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் அரங்கேறியுள்ளது. பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. படப்பிடிப்பு 80% நிறைவடைந்து விட்டதாகவும், மார்ச் 14ம் தேதி லோகேஷ் பிறந்தநாள் அன்று டீசரை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடுகிறார். டீசர் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
மகா கும்பமேளாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு, வெற்றிக்கதை ஒன்றை கூறி யோகி பதிலடி கொடுத்துள்ளார். பிரயாக்ராஜில் 130 படகுகளை வைத்து ஒரு குடும்பம் தொழில் செய்து வருகிறது. ஒவ்வொரு படகு மூலம் அவர்கள் ₹50,000 – ₹52,000 வரை வருமானம் ஈட்டினர். கும்பமேளா நடந்த 45 நாட்களில் அவர்கள் ₹30 கோடி சம்பாதித்துள்ளனர். ஒவ்வொரு படகு மூலமும் ₹30 லட்சம் வருமானம் கிடைத்ததாக தெரிவித்தார்.
மகா கும்பமேளா விழாவுக்காக ₹7500 கோடி முதலீடு செய்யப்பட்டு, ₹3 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றதாக யோகி கூறியுள்ளார். மகா கும்பமேளாவின் பொருளாதார தாக்கம் இந்த ஆண்டு இந்தியாவின் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கும். இந்த விழா மூலமாக ஓட்டல் தொழிலில் ₹40,000 கோடி, போக்குவரத்துக்கு ₹1.5 லட்சம் கோடி, சுங்கச்சாவடிகள் மூலம் ₹300 கோடி வர்த்தகம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.