News March 5, 2025

விரைவில் விசாரணை: பொன்முடிக்கு நெருக்கடியா?

image

2006- 11 காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்தபோது சுமார் ரூ.28 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய மகன்கள் இருவருடன் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

News March 5, 2025

இந்தியாவின் எதிர்காலம் எதில் இருக்கிறது? பிரதமர் சூசகம்

image

இந்தியாவின் எதிர்காலம் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடுகள் செய்வதில் தான் இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பதுடன், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளுக்கும் வித்திட்டுள்ளதாக கூறியுள்ளார். AI சார்ந்த படிப்பு, ஆராய்ச்சிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ₹500 கோடி நிதி ஒதுக்கியதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

News March 5, 2025

பிரபல நடிகை ஜியார்ஜி காலமானார்

image

இத்தாலியின் புகழ்பெற்ற திரைப்பட நடிகை எலியனாரோ ஜார்ஜி (71), கணைய புற்றுநோய் காரணமாக காலமானார். 1980-ல் வெளியான Inferno படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான ஜார்ஜி, 50-க்கு மேற்பட்ட படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். தனக்கு கேன்சர் இருந்தது தெரிய வந்தபோது, ‘நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையை வாழுங்கள்’ என ரசிகர்களிடம் கூறியது நெகிழ வைத்தது.

News March 5, 2025

குஜராத்திலா இப்படி? போலீஸ் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்

image

காந்தி பிறந்த மண், பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலம் என புகழப்படும் குஜராத்திலா இப்படி என கேட்கும் அளவுக்கு சம்பவம் ஆகியுள்ளது. போன வருடம் மட்டும் அங்கு ஒவ்வொரு 4 நொடிகளுக்கும் ஒரு மதுபாட்டிலை போலீஸ் பறிமுதல் செய்திருக்கின்றனர். சுமார் ₹144 கோடி மதிப்புள்ள 82 லட்சம் மதுபாட்டில்கள் பிடிபட்டிருக்கிறதாம். பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாதது தான் இந்த பிரச்னைக்கு காரணமாம்.

News March 5, 2025

+1 தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட்

image

+1 பொதுத் தேர்வில் இன்று 11,070 பேர் தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழகம் முழுவதும் +1 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மாணவ, மாணவியர் சிரமமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,23,261 பேர் தேர்வெழுதவிருந்தனர். இந்நிலையில் மொழிப் பாடத் தேர்வு எழுதாமல் மொத்தமாக 11,070 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

News March 5, 2025

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது: அண்ணாமலை

image

அரசியல் பேதங்களை மறந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றது மத்திய அரசுக்கு தெளிவான தகவலை சொல்லி இருக்கும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பால், தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கை ஒருபோதும் குறையாது என அமித் ஷா விளக்கியிருப்பதாக அண்ணாமலை பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் குறையாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

News March 5, 2025

நான் தலையிடமாட்டேன்… ருதுராஜ்-க்கு தோனி அட்வைஸ்!

image

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் – தோனி இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே. கடந்தாண்டு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக ருதுராஜ் நெகிழ்ந்து பேசியுள்ளார். “இது உன்னுடைய அணி, உனது முடிவில் நான் தலையிட மாட்டேன்” என ருதுராஜ்-க்கு தோனி அறிவுறுத்தி உள்ளார். எனது அறிவுரையை கேட்க வேண்டும் என கட்டாயமில்லை எனவும் தோனி தெரிவித்ததாக ருதுராஜ் கூறியுள்ளார்.

News March 5, 2025

புதிய சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்ட ஆர்.பி.உதயக்குமார்

image

ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என இபிஎஸ் கூறியதை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறவுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையில், அதிமுக மூத்த தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசியலை பொறுத்தவரை எந்த கூட்டணியும் நிரந்தரம் கிடையாது என EX மினிஸ்டர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

News March 5, 2025

கல்பனா தற்கொலை முயற்சி.. வெளியான புது தகவல்

image

கேரளாவில் இருக்கும் தனது மகள், படிப்பிற்காக ஹைதராபாத் வர மறுத்ததால், பாடகி கல்பனா, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அவரது மகள், தனது அம்மா தற்கொலைக்கு முயற்சித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை. தூக்கமின்மைக்காக மாத்திரை சாப்பிட்ட பிறகு கல்பனா மயங்கி விழுந்ததே உண்மையான காரணம் என்று விளக்கமளித்துள்ளார்.

News March 5, 2025

அவுரங்கசீப்பை புகழ்ந்த சமாஜ்வாதி MLA சஸ்பெண்ட்

image

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதாக, மகாராஷ்டிரா சமாஜ்வாதி கட்சி MLA அபு ஆஸ்மி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் அவரது படையில் பல இந்துக்கள் இருந்ததாகவும், பல கோயில்களை அவர் கட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!