News March 5, 2025

நடிகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

image

நடிகை ரன்யா ராவ் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டின் படுக்கையறை உட்பட பல இடங்களில் ₹4.73 கோடி மதிப்புள்ள ₹100, ₹200 ₹500 நோட்டு கட்டுகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்த ரன்யாவை பெங்களூருவில் போலீசார் நேற்று கைது செய்த வருவாய் புலனாய்வுத்துறை, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

News March 5, 2025

NZக்கு டப் பைட் கொடுக்கும் SA

image

ICC Champions Trophy தொடரின் 2nd Semi-Finalலில் 363 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் தெ.ஆப்., அணி டப் பைட் கொடுத்து வருகிறது. தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கல்டன் 17, பவுமா 56 ரன்களில் நடையை கட்டினர். ஆனால் நிதானமாக விளையாடும் ரஸ்ஸி 68 ரன்களிலும், மார்க்ரம் 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 27.1 ஓவரில் 162/2 ரன்கள் எடுத்த SA இன்னும் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

News March 5, 2025

சுழலும் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

image

சனி பகவான் பயணிக்கும் கும்ப ராசியில் தற்போது சூரிய பகவானும் நுழைந்திருக்கிறார். இது சில ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், மேஷம், விருச்சிகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. நீண்டகால ஆசை நிறைவேறும். தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. எதிர்பாராத பணவரவு இருக்கும்.

News March 5, 2025

உங்கள் மூளையை பாதிக்கும் பழக்கங்கள்

image

உடலின் மிக முக்கியமான உறுப்பு மூளை. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள் மூலம் அதை ஆரோக்கியமாக வைக்கலாம். ஆனால், பின்வரும் பழக்கங்கள் மூளையை சேதப்படுத்தி, அதன் செயல்பாட்டை பாதிக்கும்: *நாட்பட்ட மன அழுத்தம் *போதுமான தூக்கம் இல்லாதது *புகைப்பழக்கம் *அதிகம் இனிப்பு உட்கொள்வது *அதிக மதுப்பழக்கம் *உடலுழைப்பு இல்லாத லைஃப்ஸ்டைல். இவற்றை தவிர்த்தாலே, மூளை நன்றாக வேலை செய்யுமாம்.

News March 5, 2025

இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மார்ச் 10ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், இது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 16 பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

News March 5, 2025

மார்கோ படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை

image

ஹனிஃப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து 2024 இறுதியில் வெளியான ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் படமான ‘மார்கோ’ பெரிய ஹிட் அடித்தது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படத்தை டிவியில் ஒளிபரப்ப தற்போது தணிக்கை குழு தடை விதித்துள்ளது. மோசமான வன்முறை காட்சிகள் இருப்பதால், இது ஒளிபரப்ப ஏற்றதல்ல என்று கூறியுள்ள தணிக்கை குழு, ஓடிடியில் இருந்து இப்படத்தை நீக்கவும் பரிந்துரைத்துள்ளது.

News March 5, 2025

அண்ணாமலை வேண்டுகோள்.. தமிழக மக்களின் தீர்ப்பு என்ன?

image

மும்மொழிக் கல்விக்கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், பாஜக புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு சமக்கல்வி எங்கள் உரிமை என்ற முழக்கத்தோடு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. http://puthiyakalvi.inஇல் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கும் ஆதரவு வழங்குமாறு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 5, 2025

BREAKING: விடை பெறுகிறார் இந்திய சாம்பியன்!

image

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய டேபிள் டென்னிஸ் சாம்பியனான சரத் கமல் (42) இன்று தனது ஓய்வை அறிவித்தார். சென்னையில் நடைபெறும் WTT CONTENDERS 2025 தொடருடன் ஓய்வுபெறப் போவதாக அவர் கூறியுள்ளார். தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சரத் கமல், காமன்வெல்த் போட்டியில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றவர். அர்ஜுனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார்.

News March 5, 2025

ரத்தம் குடிக்கும் மனைவி: அலறும் ஆயுதப்படை வீரர்

image

உ.பி. ஆயுதப் படை காவலர் ஒருவர், எப்போதுமே வேலைக்கு லேட்டாக வந்துள்ளார். பொறுமையிழந்த உயரதிகாரி, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, அதற்கு அவர் அளித்த பதில் கடிதம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, தான் தூங்கினாலே தனது மனைவி வந்து ரத்தத்தை குடிப்பது போல கனவு வருவதாகவும், இதனால் தூக்கமின்மையால் உரிய நேரத்தில் வேலைக்கு வர முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2025

சைபர் மோசடியில் பறிபோன ரூ.6.8 கோடி

image

நீங்கள் செல்போனில் டிரேடிங் செயலி விளம்பரத்தை காணாமல் ஒருநாளை கழிக்க முடியாது. பணத்தாசையில் எளிய மக்கள் பலரும் மோசடி வலையில் சிக்கி பணத்தை பறிகொடுப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை காவலர் கிருஷ்ணகுமார் டிரேடிங் மோசடியில் ரூ.6.8 கோடியை பறிகொடுத்துள்ளார். ஒரு மாதத்தில் ரூ.70 லட்சம் வரை பணத்தை அவர் இழந்துள்ளார்.

error: Content is protected !!