News March 6, 2025

போர் தான் முடிவு என்றால்.. USAக்கு சீனா வார்னிங்

image

USAவின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை என சீனா எதிர்வினையாற்றியுள்ளாது. USA போரை விரும்பினால், அது வரிப்போராக இருந்தாலும் சரி, வர்த்தக போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, சீனா இறுதி வரை போராடும் எனவும் எச்சரித்துள்ளது. சீன இறக்குமதிகளுக்கான வரியை 10%லிருந்து 20%ஆக டிரம்ப் உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரியை உயர்த்தியது.

News March 6, 2025

₹3.87 கோடி வாடகை கட்டி காரை இறக்கும் டெஸ்லா

image

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம், முதல்முறையாக மும்பையில் ஷோரூம் திறக்க உள்ளது. அதற்காக பந்தார குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள 4,003 சதுரஅடி கட்டிடத்தை 5 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் லீஸுக்கு எடுத்துள்ளது. முதல் வருடத்திற்கு ₹3.87 கோடி ஆண்டு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 20% உயர்த்தப்பட்டு, 5ஆம் ஆண்டில் ₹4.70 கோடியை ஆண்டு வாடகையாக செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 6, 2025

இன்றைய (மார்ச்.06) நல்ல நேரம்

image

▶மார்ச்- 06 ▶மாசி – 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: சுவாதி ▶நட்சத்திரம் : கார்த்திகை.

News March 6, 2025

குடும்பமே அழிந்தது.. இது ஒவ்வொருக்கும் எச்சரிக்கை

image

ஆன்லைனில் ₹50 லட்சம் கடன் வாங்கி தலைமறைவான பிரேம் என்பவரின் மனைவி, மகன், மகள் நேற்று தற்கொலை செய்துகொண்டனர். இதைக் கேட்டு இதற்குமேல் வாழ்ந்து என்ன செய்வது என நினைத்த பிரேம் கரூர் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். மக்களே உயிர் விலைமதிப்பற்றது. அதை உணர்ந்து இதுபோன்று கடன் வாங்குவதை தவிர்த்து, குறைவான வருமானத்தில் நிறைவான வாழ்க்கையை வாழுங்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News March 6, 2025

25 ஆண்டு கணக்கு.. பழிதீர்க்குமா இந்தியா?

image

ஞாயிற்று கிழமை நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் IND vs NA அணிகள் மோத உள்ளன. 25 ஆண்டுகளுக்கு பிறகு ODI ஐசிசி தொடரின் ஃபைனலில் இரு அணிகளும் மோதுகின்றன. கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த ஐசிசி நாக்அவுட் டிராபியில், NZ அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் INDஐ வீழ்த்தியது. இந்த 25 வருட தோல்வி கணக்கிற்கு இந்த முறை IND பழி தீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News March 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 6, 2025

7ஆம் தேதி வருகிறான் ‘பைசன்’

image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பைசன்’. படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை கோடையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News March 6, 2025

மாணவனை காப்பாற்ற போய், உயிரை விட்ட ஆசிரியர்

image

ஓசூர் அருகே நீரில் மூழ்கிய 3 ஆம் வகுப்பு மாணவரை காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளைநிலத்தில் பள்ளம் தோண்டி தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது. இதில் 3 ஆம் வகுப்பு மாணவர் நித்தின் தவறி விழ, அவரை காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியர் கெளரிசங்கரும் நீரில் மூழ்கி தத்தளித்தார். பக்கத்தில் யாரும் இல்லாததால் நீரில் தத்தளித்தபடி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

News March 6, 2025

தினமும் பீர் குடிப்பவரா நீங்கள்?

image

மது அளவாக தான் குடிப்பேன் என சொல்பவர்களுக்கு கூட உடலில் சிறு பிரச்சனைகள் வரும். சிலர் பீர் அடித்தால் எந்த பிரச்னையும் வராது என கூறுவதை கேட்க முடியும். ஆனால் தினமும் 2 பீர் குடித்ததால் மூளை 10 ஆண்டுகள் முதிர்ச்சியடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் துரித உணவுகளும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருநாளைக்கு எத்தனை பீர் நீங்க அடிக்குறீங்க?

error: Content is protected !!