News March 6, 2025

நடிகராக அவதாரம் எடுக்கும் ‘ஸ்டார்’ டைரக்டர்

image

இயக்குநர் இளன் ஒரு புதிய படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இவர் சொன்ன கதை பிடித்து போக, இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ படங்களை இளன் இயக்கியிருந்தார். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக்கி அழகு பார்த்த AGS நிறுவனம், தற்போது இளனுக்கும் அந்த வாய்ப்பை கொடுக்க உள்ளது.

News March 6, 2025

மார்ச் 6: வரலாற்றில் இன்று

image

*632 – முகமது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். *1475 – உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி மைக்கலாஞ்சலோ பிறந்தநாள். *1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1964 – அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் காசியஸ் கிளே, தனது பெயரை முகம்மது அலி என மாற்றிக் கொண்டார். *1967 –தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

News March 6, 2025

ICCயின் தடையை நீக்க ஷமி கோரிக்கை

image

ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்ற ICCயின் தடையை மறுபரிசீலனை செய்ய முகமது ஷமி வலியுறுத்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களின் வலிமையான ஆயுதமாக ரிவர்ஸ் ஸ்விங் உள்ளது. புதிய பந்தில் எச்சிலை தடவி க்ரிப்பில் வைக்கும் நடைமுறைக்கு, கொரோனா பெருந்தொற்றின் போது ICC தடைவிதித்தது. CT ஃபைனல் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஷமி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

News March 6, 2025

உக்ரைனுக்கு உளவுத்துறை உதவியையும் நிறுத்திய USA

image

உக்ரைனுக்கு உளவுத்தகவல்களை பரிமாறுவதையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. டிரம்பின் பேச்சைக் கேட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தால், இந்த உதவிகள் மீண்டும் வழங்கப்படும் என CIA இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ராணுவ உதவி நிறுத்தப்பட்ட போதே, டிரம்புடன் இணைந்து போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருந்தார்.

News March 6, 2025

அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

image

*உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது. *மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும். *நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. நமக்கு இன்று மட்டுமே உள்ளது. *பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, உதவி செய்யும் கைகள் சிறந்தது.

News March 6, 2025

நடிகையின் தங்க வேட்டை.. ஒரு பயணத்திற்கு ₹13 லட்சம்

image

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அவர் 30 முறை துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 1 கிலோ தங்கத்திற்கு ₹1 லட்சம் கமிஷனாக பெறும் அவர், ஒரு பயணத்தில் பல கிலோ தங்கங்களை கடத்தியுள்ளார். ஒரு பயணத்தில் ₹13 லட்சம் சம்பாதித்துள்ளார். கடத்தலுக்காக ஆல்டர்னேட் செய்யப்பட்ட உடைகள், பெல்ட்டை பயன்படுத்தியுள்ளார்.

News March 6, 2025

வெப்சீரிஸில் போலீசாக நடிக்கும் கங்குலி?

image

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, நெட்ஃபிலிக்ஸ் தயாரிக்கும் ‘காக்கி 2’ வெப்சீரிஸின் விளம்பரத்தில் நடிக்கிறார். இதற்காக போலீஸ் உடையில் அவர் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. விளம்பரத்தில் நடிக்கும் அவர், இந்த வெப்சீரிஸிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டிவி விளம்பரங்கள், கேம் ஷோவில் நடித்த கங்குலி, தற்போது ஃபுல் டைம் நடிப்பில் ஈடுபடுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 6, 2025

ஹமாஸ் உடன் USA ரகசிய பேச்சுவார்த்தை

image

ஹமாஸ் உடன் USA ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் இஸ்ரேல் உடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. USA அதிபரின் தூதர் ஆடம் போஹ்லர் தலைமையில் கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கருதப்படுகிறது. ஹமாஸை கடந்த 1997ல் தீவிரவாத அமைப்பாக USA அறிவித்தது.

News March 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 198 ▶குறள்: அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். ▶பொருள்: அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

News March 6, 2025

தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

image

சினிமா துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னா, ₹120 கோடிகளுக்குச் சொந்தக்காரராவார். இவர் ஒரு படத்தில் நடிக்க ₹4-₹5 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ₹20 கோடி மதிப்பிலான சொந்த வீடு, மும்பையில் ₹7 கோடி மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்ட்டை வைத்திருக்கிறார். சொகுசு கார்களின் ரசிகையான தமன்னா BMW 320i, மெர்சிடஸ் பென்ஸ், பஜிரோ ஸ்போர்ட் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய கார்களையும் கொண்டுள்ளார்.

error: Content is protected !!