News March 6, 2025

கோயில் இசைக்கச்சேரிகளில் சினிமா பாடல்களுக்குத் தடை

image

கோயில் வளாகத்தில் நடத்தப்படும் இசைக் கச்சேரியில் சினிமா பாடல்களுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. கோயில் தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த ஐகோர்ட், கோயில் வளாகங்களில் பக்தர்கள் ஏற்பாடு செய்யும் இசைக்கச்சேரியில் பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்றும், பக்தி அல்லாத சினிமா பாடல்கள் பாடப்படுவதை ஏற்க முடியாது, அதற்கு நடனம் ஆடுவதையும் ஏற்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது.

News March 6, 2025

ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிப்பு

image

லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் அகோலாவில் 2022 டிச.17ல் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக ராகுலுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகவில்லை என்பதால் நீதிபதி அபராதம் விதித்துள்ளார்.

News March 6, 2025

மாதம் ரூ.5,000: 10ஆம் வகுப்பு படித்தாேர் விண்ணப்பிக்கலாம்

image

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது. இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் 10ஆம் வகுப்பு படித்தாேரும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு மார்ச் 12ஆம் தேதியே கடைசி நாளாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

பாலிவுட்டில் இருந்து வெளியேறுவது உறுதி: அனுராக்

image

பாலிவுட்டில் இருந்து வெளியேறுவதை அனுராக் காஷ்யப் மீண்டும் உறுதி செய்துள்ளார். ₹500 கோடி, ₹800 கோடி என பாக்ஸ் ஆஃபிஸ் அடிப்படையில் மட்டுமே பாலிவுட் சினிமாவில் படங்கள் எடுக்கப்படுவதாகவும், அங்கு படைப்பு சுதந்திரத்திற்கு இடமில்லாமல் போய்விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த டிசம்பரில் வெளியேறப் போவதாக அறிவித்த நிலையில், தற்போது பெங்களூருவில் செட்டில் ஆகப்போவதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.

News March 6, 2025

CT ஃபைனலில் INDஐ வீழ்த்த முடியும்: சாண்ட்னர்

image

CT ஃபைனலில் INDஐ வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக NZ கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே துபாயில் IND அணியுடன் விளையாடி உள்ளதாகவும், அந்த போட்டியில் தோற்றாலும், IND அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஃபைனலில் டாஸ் வென்றால் நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். IND vs NZ மோதும் இறுதிப்போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

News March 6, 2025

அரசு பள்ளிகள் மீது அரசுக்கு அக்கறை இருக்கா? ராமதாஸ்

image

அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால், ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2024ல் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை எனவும், 2023ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் பணியாணை வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர்களை தேர்வு செய்யாத ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு எனவும் வினவியுள்ளார்.

News March 6, 2025

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1ஆம் தேதி வழங்கப்படும். மே 4ஆம் தேதி 13 மொழிகளில், தேர்வு நேரடி முறையில் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

News March 6, 2025

நேஷனல் க்ரஷ் ரஷ்மிகாவின் க்யூட் க்ளிக்ஸ்

image

நடிகை ரஷ்மிகா மந்தனா சேலை அணிந்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தானே ஹேர் ஸ்டைல் செய்து ஃபிரண்டை போட்டோ எடுக்க சொன்னதாகவும், இது கல்லூரி நாள்களை நினைவுபடுத்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். என்னதான் மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கினாலும், சேலைக்கு இருக்கும் அழகே தனிதான். ரஷ்மிகாவின் குறும்புத்தன ரியாக்‌ஷன்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை வாரி இரைத்து வருகின்றனர்.

News March 6, 2025

UPIல் EPF பணத்தை எப்போது முதல் எடுக்கலாம்?

image

UPIல் EPF சேமிப்பு பணத்தை எடுக்கும் வசதி வரும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக EPFO அமைப்பு, NCPI உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நடைமுறை அமலாகும் பட்சத்தில், ஊழியர்கள் GPay, PhonePe, Paytm ஆப்களில் சில நிமிடங்களில் சேமிப்பு பணத்தை எடுக்கலாம். தற்போதுள்ள நடைமுறையில் 23 நாள்கள் காத்திருக்க வேண்டும்.

News March 6, 2025

புவியீர்ப்பு விசை வேதத்தில் உள்ளது: ராஜஸ்தான் ஆளுநர்

image

நியூட்டனுக்கு முன்பே புவியீர்ப்பு விசை குறித்து வேதத்தில் சொன்னவர்கள் இந்தியர்கள் என ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாபு தெரிவித்துள்ளார். தசம முறையும் இந்தியாவில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இந்தியாவின் பண்டைய அறிவை அழிக்க தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 1190களில் நாலந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டதே அதற்கு சாட்சி எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!