India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத்தில் 12,756 அடி உயரத்தில் உள்ள குகையில், பனியால் உருவாகும் சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரை வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி, 39 நாட்கள் நீடித்து ஆகஸ்ட் 9ல் நிறைவடைகிறது.
மாதந்தோறும் ரேஷன் குறைதீர்ப்பு முகாம் அரசால் நடத்தப்படுகிறது. இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி, மார்ச் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் வருகிற சனி (மார்ச் 8) உணவு சப்ளை, நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் தேர்வில் ராஜீவ் காந்தி ஃபெயில் ஆனார் என மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். ராஜீவ்வோடு தானும் படித்ததாகவும், படிப்பில் அவர் பின்தங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார். அவர் பிரதமரான போது 2 முறை ஃபெயில் ஆன பைலட் பிரதமராகி இருப்பதாக, தான் நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை சுட்டிக்காட்டிய பாஜக, CONG-க்கு மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்ப தகுதியில்லை என பதிலடி கொடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். CT அரையிறுதிப் போட்டியில் சதமடித்ததன் மூலம், இந்த சாதனையை படைத்துள்ளார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என 3 வடிவங்களிலும் சேர்த்து 19,000 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் 18,199 ரன்களோடு உள்ளார்.
UAEஇல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் முகமது ரீனாஸ், முரளிதரன் என்பதும் தெரிய வந்துள்ளது. UAE பிரஜையை கொலை செய்த வழக்கில் ரீனாசும், இந்திய தொழிலாளியை கொலை செய்த வழக்கில் முரளிதரனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை இந்திய தூதரகத்திடம் UAE அரசு தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், இணையத்தில் ஆபாச படங்கள் பார்த்த மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு சைபர் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுக் கொல்லும் (Firing Squad) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2001ல் முன்னாள் காதலியின் பெற்றோரை கொலை செய்ததற்காக, பிராட் சிக்மோன் (67) என்பவருக்கு நாளை இத்தண்டனை வழங்கப்பட உள்ளது. 1608ல் அறிமுகமான இந்த தண்டனை முறை, கடைசியாக 2010ல் செயல்படுத்தப்பட்டது. 1980களுக்குப் பிறகு பெரும்பாலும் இதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்தும் முறையே பின்பற்றப்பட்டது.
வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் போட்டியிட்டாலும் அவரால் மீண்டும் முதல்வராக முடியாது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருவதால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயக்கம் காட்டும் என்றும், இதை தன்னால் எழுதிக்கூட தர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
வரும் 2025 -26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கருத்துகளை tnagribudget2025@gmail.com என்ற இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம். ஏற்கெனவே, கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த கருத்துகேட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
Sorry, no posts matched your criteria.