News March 6, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.8,065க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.64,520க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.45 குறைந்து ரூ.8,020க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.360 சரிந்து ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News March 6, 2025

செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளில் ED ரெய்டு

image

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 3 பேரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10–க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும் ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கர், கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்தி மெஸ் கார்த்தி உள்ளிட்டோரின் வீடுகளில் காலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.

News March 6, 2025

WPL: மும்பை இந்தியன்ஸ் Vs உ.பி.வாரியர்ஸ் இன்று மோதல்

image

WPL தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் உ.பி.வாரியர்ஸ் மோதுகிறது. நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கெனவே மோதிய ஆட்டத்தில் மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தற்போது மும்பை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலும், உ.பி அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் வென்று முந்தைய தோல்விக்கு உ.பி அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 6, 2025

எஸ்.ஐயை வெட்டிவிட்டு எஸ்கேப் முயற்சி: சுட்டுப்பிடித்த போலீஸ்

image

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் என்பவர் மேலநம்பிபுரத்தில் பதுங்கியிருந்தார். அவரை பிடிக்கச் சென்றபோது எஸ்.ஐ.முத்துராஜாவை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதனால், போலீசார் துப்பாக்கியால் சுட்டு முனீஸ்வரனை பிடித்தனர். காயமடைந்த முனீஸ்வரன், எஸ்ஐ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 6, 2025

நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான்: இளையராஜா

image

லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். லண்டன் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான், இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என்றார். மேலும், Incredible இந்தியா மாதிரி, தான் Incredible இளையராஜா எனவும் உங்களின் பெருமையைத்தான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றும் கூறினார்.

News March 6, 2025

பணியில் சேர்ந்த ஓராண்டில் இறந்தால் ₹50,000 காப்பீடு

image

சந்தாதாரராகி, ஓராண்டு பணி நிறைவு பெறுவதற்குள் உயிரிழக்க நேரிட்டால், குறைந்தபட்ச ஆயுள் காப்பீட்டு பலனாக ₹50,000 வழங்கப்படும் என EPFO அறிவித்துள்ளது. இதுபோல், ஆண்டுக்கு 5,000 உயிரிழப்புகள் நேரிடும் நிலையில், இந்த காப்பீட்டு பலன் உதவியாக இருக்கும். அத்துடன், 6 மாதங்கள் வரை PF சந்தா செலுத்தாமல் இருந்தாலும் இறப்பு நேரிட்டால், தொழிலாளர் குடும்பத்துக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

News March 6, 2025

ஹீரா கோல்டு மோசடி: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

image

ஹீரா கோல்டு நிறுவனம் 36% வரை லாபம் தருவதாக கூறி, நாடு முழுவதும் வலைவிரித்து முதலீட்டாளர்களை ஈர்த்தது. கோடிக்கணக்கில் பணம் சேர்ந்ததும் முதலீட்டாளர்களை ஏமாற்றத் தொடங்கியதால், நிர்வாக இயக்குநர் நெளஹெரா ஷேக் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 3 மாதத்தில் ₹25 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும், இல்லையென்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரித்திருக்கிறது.

News March 6, 2025

தொகுதி மறுசீரமைப்பு: திமுக கூட்டணியில் விரிசலா?

image

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கவே ராகுல் விரும்புகிறார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பாக அவரிடம் பேசியிருந்தால், இதை நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஏற்பட்டிருக்காது. மறுசீரமைப்பால் பார்லிமென்டில் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் குறையாது என்றும் கூறினார்.

News March 6, 2025

அண்ணா என்ற சம்பவக்காரன் ஆட்சியில் அமர்ந்த தினம்

image

இந்திய அரசியல் வரலாற்றில் மார்ச் 6 முக்கிய நாளாகும். இந்தியாவில் ஒரு மாநிலக்கட்சி (திமுக) முதல் முறையாக ஆட்சி பொறுப்பேற்று, இன்றைய மாநிலக் கட்சிகளின் ஆட்சிக்கு விதைப்போட்ட தினம். அரசியலில் மக்கள் சக்தி உடனிருந்தால் யாரையும் வீழ்த்தலாம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்திய வரலாற்று தினம். இந்திய அரசியல் வரலாறு எங்கே தொடங்கி, எங்கே முடிக்கப்பட்டாலும் அங்கே ‘அண்ணா’ நடுநாயகமாக எப்போதும் வீற்றிருப்பார்.

News March 6, 2025

4.97 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000: அமைச்சர் பிடிஆர்

image

புதுமைப் பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி 4.97 லட்சம் மாணவிகள், 4.16 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் கூறியுள்ளார்.

error: Content is protected !!