India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசையை போலீஸ் கைது செய்தது. தடையை மீறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் அவர் கையெழுத்து பெற முயன்றதாக கூறி போலீசார் தடுத்தனர். அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்தினால் அதை தடுப்பதா? என கேள்வி எழுப்பியதால் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதனால் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான புளும்பெர்க் நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளூம்பெர்க், 2024ஆம் ஆண்டில் மட்டும் ரூ.32,184 கோடியை நன்கொடை அளித்துள்ளார். கல்வி, கலை, பொது சுகாதாரம் தொடர்பான அறக்கட்டளைகளுக்கு அவர் இத்தொகையை தானமாக அளித்துள்ளார். இதன்மூலம் அந்நாட்டில் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக மிக அதிக தொகையை தானம் அளித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய். பெண் கல்விக்காக அயராது குரல் கொடுத்து வந்த மலாலாவின் செயல்பாட்டால் ஆத்திரமடைந்த தாலிபன்கள் 2012ம் ஆண்டு அவரை துப்பாக்கியால் சுட்டு நாட்டை விட்டு வெளியேற்றினர். அதன் பிறகு ஒரு சில முறை மட்டுமே பாகிஸ்தான் சென்று வந்த அவர், முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு திரும்பி உறவினர்களை சந்தித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் படங்களான “ஆல் மை சில்ரன்”, “ரையான் ஹோப்ஸ்”, “அஸ் த வேர்ல்ட் டர்ன்ஸ்” உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பெலிசியா மினி பெர். அவரின் கணவர் எம்மி விருது வென்ற தொழில்நுட்ப இயக்குனர் ராபர்ட் பெர். பெலிசியா (82) மூளைப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சென்னை புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை நடத்தினர். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய குழு சுமார் 3 மணி நேரம் வரை ஆய்வு மேற்கொண்டது. தனிமைச் சிறை, உயர் பாதுகாப்பு அறை, பெண்கள் சிறை ஆகியவற்றை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்தும் கைதிகளிடம் கேட்டறிந்தனர்.
கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று தென் ஆப்ரிக்கா. பேட்டிங்,பவுலிங், பில்டிங் என அனைத்திலும் புலியாக பாய்ந்தாலும், ஐசிசி போட்டிகள் என்றால் பூனையாக மாறிவிடுவார்கள். ஐசிசி அரையிறுதியில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனை அவர்களிடமே உள்ளது. இதுவரை 12 முறை தோல்வியை கண்டுள்ளனர். 11 தோல்விகளுடன் 2வது இடத்தில் நியூசிலாந்து உள்ளது.
ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கூறி தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு, அதில் கை வைப்பது ஆபத்து என எச்சரித்துள்ளார். ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். சோவியத் யூனியன் சிதைந்ததற்கு மொழி ஆதிக்கமும் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ், நிஃப்டி நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது, முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து 73,659 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், நிஃப்டி 16 புள்ளிகள் சரிந்து 22,320 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
2026இல் மீண்டும் ADMK ஆட்சி அமைவது உறுதி என சசிகலா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் பேசிய அவர், அதிமுகவை ஒன்றிணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றார். திமுக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதை தற்போது அனைவரும் உணரத்தொடங்கி உள்ளதாகவும், தங்களின் கூட்டணியை உறுதி செய்யவே, அனைத்துக்கட்சிக் கூட்டம் என்ற பெயரில், கூட்டணி தலைவர்களை வைத்து DMK நாடகம் நடத்தியதாகவும் அவர் சாடியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் சென்னையில் வரும் 18 முதல் 20ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10 வகுப்பு படித்து 18 வயது நிரம்பியவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ட்ரோன் டெக்னாலஜி, ட்ரோன் ஒளிப்பதிவு நுட்பங்கள், வான்வழி படம் எடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். கூடுதல் தகவல் அறிய 8668102600, 8668108141, 7010143022இல் அழைக்கலாம். அல்லது <
Sorry, no posts matched your criteria.