News March 6, 2025

திருப்பதியில் இனி மசால் வடை

image

திருப்பதி என்றாலே லட்டுதான். ஆனால், இனி மசால் வடையும் கிடைக்குமாம். அட ஆமாங்க, தினசரி நடக்கும் அன்னதானத்தில் தான் மசால் வடை பரிமாறப்படுகிறது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டத்தை தேவஸ்தான அறங்காவலர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் சாப்பிட அமர்ந்திருந்த பக்தர்களின் இலைகளில் மசால் வடையும் பரிமாறப்பட, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கம் எழுப்பி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News March 6, 2025

குழந்தை பிறப்பு விகிதம் (TFR) என்றால் என்ன?

image

பெண்கள் தங்கள் வாழ்நாளில் பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையே பிறப்பு விகிதம் (Fertility Rate -TFR) ஆகும். ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்க, அந்நாட்டில் TFR, 2.1 ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் TFR தற்போது 2.01 தான். உபி, பிஹார் போன்ற வடமாநிலங்களில் இதைவிட அதிகம். ஆனால், குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக செய்த தமிழ்நாட்டிலோ TFR விகிதம் 1.52 ஆகவுள்ளது. இதுவே தற்போது பாதகமாகிவிட்டது.

News March 6, 2025

பயத்தில் தடுமாறிவிட்டார் CM: அண்ணாமலை சாடல்

image

தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற தமிழிசை உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பதைக் கண்டு, CM ஸ்டாலின் பயத்தில் தடுமாறியதாகச் சாடிய அவர், இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து பின் வாங்கப்போவதில்லை என்றார். வீடு வீடாக செல்வோம், எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாக கைது செய்ய முடியும் என்று வினவியுள்ளார்.

News March 6, 2025

பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. டெல்லி அரசு வரையறை

image

டெல்லி தேர்தலின்போது பாஜக தரப்பில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பாஜக, அத்திட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்கள், IT வரி கட்டாதோருக்கு ரூ.2,500 வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News March 6, 2025

₹1,200 முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

image

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை ₹1,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாதக் கடைசி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியிருப்பதால், 10ம் தேதிக்குள் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 6, 2025

இந்தியாவுக்கு சாதகம்… நியூசிலாந்துக்கு பின்னடைவு…

image

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் நியூசிலாந்தின் மேட் ஹென்றி. நேற்றைய அரையிறுதி ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் கேட்ச் ஒன்றை பிடிக்க முயன்ற போது காயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் ஹென்றி பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
. அவர் விளையாடவில்லை என்றால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

News March 6, 2025

தவெகவினருக்கு பறந்த அறிவுரை? – விஜய் அதிரடி!

image

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி களமாடும் விஜய், மக்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கு தயாரான அவர், தவெக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக மக்கள் பிரச்னைகளை அறிந்து, போராட்டங்களை முன்னெடுக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 6, 2025

ஐகோர்ட்டால் ‘ஆனந்த’மான விகடன்

image

ஆனந்த விகடனின் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சர்ச்சைக்குரிய கார்ட்டூனை நீக்க ஆனந்த விகடனுக்கும் அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கைவிலங்கிட்டு அமெரிக்கா இந்தியாவுக்கு நாடு கடத்தியது தொடர்பாக விகடன் வெளியிட்ட கார்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமரை அவமதிக்கும் வகையில் இருந்ததால் அதன் இணையதளம் முடக்கப்பட்டது.

News March 6, 2025

வெள்ளி விலை கிலோ ரூ.1,000 அதிகரிப்பு

image

சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.107க்கு விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.1.07 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.108க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1.08 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சென்னையில் <<15666869>>தங்கம் <<>>விலை 1 கிராம் ரூ.40ம், ஒரு சவரன் ரூ.360ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2025

தங்கம் கடத்திய நடிகை: மௌனம் கலைத்த தந்தை!

image

கன்னட நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து 14 கிலோ தங்கம் கடத்தியது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகையின் வளர்ப்பு தந்தையும் ஐபிஎஸ் அதிகாரியுமான டிஜிபி ராமசந்திரா ராவ் மௌனம் கலைத்துள்ளார். மகளின் கைது செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகு தனக்கும் மகளுக்கு தொடர்பில்லை என்றும் கூறினார்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!