India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்றும், இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆக.5ஆம் தேதி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
‘என்னா வெயிலு’-ன்னு மக்கள் இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாட்டின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது தான் அதற்கு காரணம். மேலும், சூடேற்றும் செய்தியை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 10ம் தேதி வரை இயல்பைவிட 2- 3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பவே இப்படின்னா, கோடைக்காலம் ஆரம்பிச்சா எப்படி இருக்குமோ?…
2011இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, நெல்லை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டம் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி செல்வராஜூக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய அந்தோணி ராஜ், ராஜன், லீலா, பாபு அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு 3 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது.
சினிமா இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏ.ஆர். முருகதாசிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து, பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான 1947 ஆகஸ்ட் 16 படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் பொன்குமார். அவருக்கும், விவேகா என்பவருக்கும் தென்காசி மாவட்டம் கீழகலங்கலில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து அண்மையில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது.
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளிடம் காங்கிரஸ் திமிர்பிடித்த அணுகுமுறையை கடைபிடிப்பதாகவும், இது அவர்களின் ஆதிக்க மனநிலை இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் மதச்சார்பற்ற வாக்காளர்கள் எப்படி அவர்களை நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.
சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டில் ரயில்கள் மோதி 696 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”2024இல் மட்டும் ரயில்கள் மோதியும், ரயில்களில் இருந்து தவறி விழுந்தும் 1,196 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார். இதில் அதிகபட்சமாக சென்னை கடற்கரை- விழுப்புரம் தடத்தில் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜக இளைஞர் அணித் தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் பெங்களூருவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேஜஸ்வியின் நெருங்கிய நண்பரான அண்ணாமலை இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.
TN அரசியலில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அதிமுகவின் ஜெயக்குமார், அனைத்துக் கட்சி கூட்டம் நாடகமாக தோன்றுகிறது என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பாஜகவுடன் தாங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றிபெறாது என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த மாதம் 8ஆம் தேதி மகளிர் தினமாகும். ஆதலால் வழக்கமாக செலுத்தப்படுவது போல 15ஆம் தேதி அல்லாமல் முன்கூட்டியே 8ஆம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் காரணமாக ஜனவரியில் முன்கூட்டி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.